அதேவேளை நடப்பாண்டுக்கான உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக இலங்கை அணியின் முன் னாள் அணித்தலைவரும், நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்க கார
தெரிவாகியுள்ளார். விஸ்டன் கிரிக்கட் சஞ்சிகையினால் ஆண்டுதோறும் வருடத்திற்கான மிகச்சிறந்த கிரிக்கட் வீரர்கள் மற்றும்; உலகின் முன்னிலை வீரர் ஆகியோரின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் நடப்பாண்டுக் கான மிகச் சிறந்த வீரர்கள் பட்டிய லில் இலங்கை அணித்தலைவர் மெத்தியு+ஸ், நியு+ஸிலாந்து வீரர் ஜPடன் பட்டேல், இங்கிலாந்து வீரர் மொயின் அலி, கெரி பலன்ஸ் மற்றும் அடம் லயித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். குறித்த சஞ் சிகை கடந்த 1889 ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கான சிறந்த 5 கிரிக்கட் வீரர்களுக்கும் 2004 ஆம் ஆண்டு முதல் உலகின் முன்னிலை வீரருக் கான விருதினையும் வழங்கி வரு கின்றமை குறிப்பிடத்தக்கது.