புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

9 ஏப்., 2015

நாகூர் ஹனீபா உடல் அடக்கம்-ஜெயகாந்தன் உடல் தகனம்பிரபல இஸ்லாமிய பாடகர் நாகூர் ஹனீபா( வயது 90) நேற்று உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.  அவரது உடல் நாகூருக்கு எடுத்துச்செல்லப்பட்டது.  பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர், இன்று மாலை 5 மணிக்கு  இறுதி ஊர்வலம் தொடங்கியது.  

 நாகூர் மரைக்காயர் பள்ளியில் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். 

ஜெயகாந்தன் உடல் தகனம் ( படங்கள் )

முதுபெறும் தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார்.  

இன்று மதியம் சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலம் தொடங்கியது.   பெசண்ட் நகர் மின் மயானத்தில் ஜெயகாந்தன் உடல் 3 மணிக்கு தகனம் செய்யப்பட்டது.

ஜெயகாந்தன் உடல் தகனம் செய்த போது கவிஞர் வைரமுத்து, திலகவதி ஐபிஎஸ் மற்றும் எழத்தாளர்கள் பலரும் அருகிலேயே இருந்தனர்.
ஜெயகாந்தன் உடல் தகனம் ( படங்கள் )

முதுபெறும் தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார்.  அரசியல் பிரமுகர்கள், எழுத்தாளர்கள், பிரதமர், குடியரசுத்தலைவர் உட்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர்.  நேரிலும் பல முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.