புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஏப்., 2015

திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட 89 மனித எலும்புக் கூடுகள் குறித்த அறிக்கை புதைக்குழி அருகில் மர்ம கிணறு: விசாரணை


மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைக்குழிக்கு அருகில் இருக்கும் சந்தேகத்திற்குரிய கிணற்றில் அகழ்வுகளை மேற்கொண்டு 10 நாட்களுக்குள் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு மன்னார் மாவட்ட நீதிபதி நேற்று பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஒரு வாரத்திற்கு முன்னர் நீதிமன்றம் இந்த உத்தரவை பொலிஸாருக்கு பிறப்பித்திருந்தது. எனினும் அப்படி சந்தேகத்திற்குரிய கிணறு அந்த பிரதேசத்தில் இல்லை என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
எனினும் மன்னார் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்த, மன்னார் வெகுஜன அமைப்புகள், அப்படியான கிணறு ஒன்று இருப்பதாகவும் அது குறித்து விசாரணை நடத்தினால், நீதிமன்றத்திற்கும், பொலிஸாருக்கும் உதவத் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தன.
மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மன்னார் மாவட்ட நீதிபதி, சம்பந்தப்பட்ட அமைப்புகளின் உதவியுடன் அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதுமாத்திரம் இன்றி மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட 89 மனித எலும்புக் கூடுகள் குறித்த அறிக்கை இதுவரை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை. எனவே அதனை துரிதமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ad

ad