புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஏப்., 2015

எமது எம்.பிக்களை ஏசி அவமதித்துவிட்டு எமது ஆதரவை எப்படி எதிர்பார்க்க முடியும்?


ஆதரவு வழங்க முடிவெடுத்தாலும் உடனடியாக எடுத்த முடிவின் பிரகாரமே தோற்கடித்தோம்
எமது எம்.பிக்களை ஏசி அவமதித்துவிட்டு அரசாங்கம் எப்படி எமது ஆதரவை எதிர்பார்க்க முடியும்? திறைசேரி முறி தொடர்பான பிரேரணைக்கு முதலில் ஆதரவு வழங்க முடிவு செய்தாலும் அந்த நேரத்தில் எடுத்த முடிவின் பிரகாரமே அதனை தோற்கடித்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அநுர பிரியதர்சன யாப்பா எம்.பி. கூறினார்.
நாட்டுக்கு பாதகமான எந்த பிரேரணைக்கும்
ஆதரவு வழங்காதிருக்க முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்ட அவர், பெரும்பான்மை பலமுள்ள எமது ஆதரவு வேண்டுமானால் அரசாங்கம் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், 400 பில்லியன் திறைசேரி முறி விநியோகிக்கும் பிரேரணையை நிறைவேற்ற ஐ. தே. க.வுக்கு தேவையிருக்கவில்லை. அதனாலே பிரதமரோ நிதி அமைச்சரோ முக்கிய அமைச்சர்களோ வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
எமது எம்.பி.க்களை திருடர்களென்று கூறி பலாத்காரமாக இழுத்துச் செல்கையில் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் பிரச்சினை எழுகிறது. மஹிந்தானந்த அலுத்கமகேயின் மகனை கூட சி. ஐ. டி. விசாரித்துள்ளது. இப்படியே போனால் வீட்டு நாயை கூட விசாரிப்பர். தனிப்பட்ட பழிவாங்கலாகவே எம்.பிக்கள் விசாரிக்கப்படுகின்றனர்.
அரசாங்கத்தை அச்சுறுத்துவதற்காக நாம் திறைசேரி முறி பிரேரணையை தோற்கடிக்கவில்லை. பலம்வாய்ந்த எதிர்க் கட்சியாக அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஆராய்ந்து வருகிறோம். அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காகவே திறைசேரி முறிகளை விநியோகிப்பதாக முதலில் கூறினாலும் தங்களுக்கு கடன்பெற தேவையில்லை என்று பின்னர் நிதி அமைச்சர் கூறினார். முன்னுக்குப் பின் முரணான விடயங் களையே அரசாங்கம் கூறியது.
விவாதம் ஆரம்பித்தது முதல் எமது எம்.பிக்களையும் எமது கடந்த அரசாங்கத் தையும் முன்னாள் ஜனாதிபதியையும் விமர்சித்தனர். எம்மை ஏசி விட்டு எப்படி எமது ஆதரவைப் பெற முடியும். அவமதித்துவிட்டு எப்படி எமது ஆதரவை எதிர்பார்க்க முடியும். ஆரம்பத்தில் இதற்கு ஆதரவு வழங்க முடிவு செய்திருந்தாலும் அந்த நேரத்தில் எடுத்த முடிவின் பிரகாரமே எதிர்த்து வாக்களிக்க தீர்மானித்தோம். பெரும்பான்மை பலமுள்ள எமது ஆதரவை பெற வேண்டுமானால் அரசாங்கத்தின் நடத்தை ஒழுங்காக இருக்க வேண்டும்.
நல்ல பிரேரணைகளுக்கு எமது ஆதரவை வழங்குவோம். எமது எம்.பி.க்களுக்கு சுயகெளரவம் இருக்கிறது. எமது எம்.பிக்கள் தவறு செய்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை விடுத்து மோசமாக நடத்தினால் எமது முடிவு வேறுவிதமாகவே இருக்கும். மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான வர்களே இந்த பிரேரணையை தோற்கடித்ததாக தெரிவிக்கும் குற்றச்சாட்டு தவறானது. அவரை வீணாக இதில் இழக்கத் தேவையில்லை. அவ்வாறானால் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களா?
எமது எம்.பிக்கள் யாரும் வாக்கெடுப்பு கோரவில்லை என்றார்.இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜோன் செனவிரத்ன எம்.பி. திறைசேரி முறி பிரேரணைக்கு நாம் கட்சித் தலைவர் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்திருந்தோம். முதலில் ஒன்று கூறிவிட்டு பின்னர் வேறொன்று கூறும் அரசாங்கம் குறித்து எப்படி நம்பிக்கை வைக்க முடியும். முதலில் இந்த பிரேரணைக்கு ஆதரவு வழங்க முடிவு செய்தாலும் அரசின் மீதான நம்பகத்தன்மை குறித்த பிரச்சினையால் வேறு முடிவு எடுக்க நேரிட்டது.

ad

ad