புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மே, 2015

20ம் திருத்தச் சட்டமூலத்தை 19ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை
தேர்தல் முறைமை மாற்றம் குறித்த 20ம் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 19ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதிய தேர்தல் முறைமையின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 255 ஆக உயர்த்தப்பட உள்ளது.
விருப்பு வாக்கு முறைமை இல்லாதொழிக்கப்பட உள்ளது.
தொகுதிவாரி மற்றும் விகிதாசார அடிப்படையில் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
தொகுதிவாரி, தேசிய விகிதாசாரம், மாவட்ட விகிதாசாரம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட உள்ளதாக பேச்சாளர், கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
20ம் திருத்தச் சட்டம் குறித்த யோசனை ஏற்கனவே அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
புதிய தேர்தல் முறைமையினால் சிறுபான்மை மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் வீழ்ச்சியடையும் என சிறுபான்மை கட்சிகள் அதிருப்தி வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அனைத்து இன சமூகங்களுக்கும் நியாயம் கிட்டும் வகையில் தேர்தல் முறைமை மாற்றம் அறிமுகம் செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

ad

ad