புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மே, 2015

ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஆறு அமைச்சர்கள் கையொப்பம
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான யோசனையில் ஆறு அமைச்சர்களும் கையொப்பமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர்களும் இந்த நம்பிக்கையில்லா தீர்மான யோசனையில் கையொப்பமிட்டுள்ளதனால் அதனை சபாநாயகர் சமல் ராஜபக்சவிடம் ஒப்படைப்பதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றார்கள்.
நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான யோசனையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களே கையொப்பமிட்டுள்ளனர்.
அரசாங்க அமைச்சர் ஒருவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான யோசனையில் அரசாங்க அமைச்சர்கள் கையொப்பமிடுவது சம்பிரதாயத்திற்கு முரணானது என சட்ட வல்லுனர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இந்த விடயம் குறித்து ஆராய்ந்ததன் பின்னரே நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த யோசனை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இதேவேளை, தமக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான யோசனையை துரித கதியில் முன்வைக்குமாறு நிதி அமைச்சர் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad