புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

27 மே, 2015

ஜெயலலிதாவுக்காக மொட்டை போட்டார் அமைச்சர் செந்தில்பாலாஜி!5 ஆயிரம் அ.தி.மு.க.வினரும் மொட்டை


ஜெயலலிதா விடுதலையானதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி பொட்டை அடித்துக் கொண்டுள்ளார்.

சொத்து குவிப்பு  வழக்கில் இருந்து விடுதலையான ஜெயலலிதா  கடந்த 24ஆம்
தேதி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் கோவில்களில் ஆங்காங்கே அ.தி.மு.க.வினர் மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, திருச்செந்தூரில் மொட்டை போட்டு பிரார்த்தனை செய்தார். இதேபோல திருப்பூர் மேயர் விசாலாட்சி பழனி முருகன் கோவிலில் மொட்டையடித்து தனது வேண்டுதலை நிறைவேற்றிய நிலையில், எப்போதும் அதிரடிக்கு பெயர் போன அமைச்சர் செந்தில்பாலாஜி அமைதியாகவே இருந்தார்.
ஜெயலலிதா சிறைக்கு சென்றபோது தீபாவளி சமயத்தில் திருப்பதிக்கு சென்று ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுதலையாக  மொட்டை போட்டு திரும்பியவர், அடுத்தடுத்து கோவில் வழிபாடு, சிறப்பு பூஜை, யாகம், ரத்ததானம், காவடி தூக்குதல், அக்னி சட்டி எடுத்தல், பிரமாண்ட விளக்கு பூஜை என அடுத்தடுத்து செய்து வந்த செந்தில் பாலாஜி, தாடி வளர்த்து முழு சாமியாரைப்போல் காட்சியளித்தார். அதேநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா அமைச்சரவையில் பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில், அடுத்த அதிரடி என்ன செய்யப்போகிறாரோ செந்தில்பாலாஜி என யோசிப்பதற்குள் அதை நிறைவேற்றிக் காட்டிவிட்டார்.

கரூரில் இன்று முதல் துவங்கிய கரூர் மாரியம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி இன்று காலை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தலைமையில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் திரண்டு, கரூர் அமராவதி ஆற்றுக்கு சென்றனர்.
அங்கு  அமைச்சர் செந்தில்பாலாஜி ஜெயலலிதா விடுதலையானதற்காக வேண்டுதலை நிறைவேற்றி மொட்டை போட்டார். அவரைத் தொடர்ந்து 5 ஆயிரம் அ.தி.மு.க.வினரும் மொட்டை அடித்துக் கொண்டனர்.  பின்னர் கரூர் அமராவதி நதியில் இருந்து சண்டிமேளங்கள் முழங்க ஆரவாரத்துடன் பிளக்ஸ் பேனர்கள் என புடை சூழ, கையில் தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக புறப்பட்டு கரூர் மாரியம்மன் கோயிலுக்கு வந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர்

இது, அமைச்சர்கள் மொட்டையோடு வலம்வரும் காலம்போல!