புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மே, 2015

நெல்லூர் மாவட்டத்தில் இரவில் பறவைகள் போல் பறந்து திரியும் அதிசய மனிதர்கள்? -மக்கள் அச்சம்



ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் புறநகரில் சந்திரபாபுகாலனி, ஒய்.எஸ்.ஆர்.நகர், படார் பள்ளி, சுந்தரய்யா காலனி, டைலர்ஸ் காலனி, கடமானு பல்லி, பவுர்யா காலனி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.

இங்கு கடந்த 1 வாரமாக இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மனித வடிவில் வித்தியாசமான உருவங்கள் ஜோடி ஜோடியாக வானத் தில் பறப்பதாக தகவல் பரவி  உள்ளது.
இந்த உருவங்களுக்கு கைகளுக்கு பதில் 2 இறக்கைகள் வெள்ளி போல வெண்மை நிறத்தில் காணப்படுகின்றன. கால்கள் மனிதர்களுக்கு இருப்பது போல நீளமாக உள்ளன.

இந்த உருவங்கள் பூமியை நோக்கி பறந்து வருவதாகவும் பின்னர் வானத்துக்கு சென்று விடுவதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். சில உருவங்கள் வீட்டு கூரை மீது நின்றபடி கீச்... கீச்... குரலில் பேசிக் கொள்வ தாகவும் பொது மக்கள் தெரிவித்தனர்.

இந்த பகுதி மக்கள் வெயில் காலத்தில் காற்றுக்காக வீட்டுக்கு வெளியே படுத்து தூங்குவது வழக்கம். மனித உருவங்கள் பறப்பதாக தகவல் வந்தவுடன் யாரும் வெளியே படுப்பது இல்லை. இரவு 7 மணிக்கே வீட்டு ஜன்னல், கதவுகளை மூடிக் கொள்கிறார்கள். சிலர் ஜன்னலை மட்டும் திறந்து அந்த உருவங்களை பார்க்கிறார்கள்.

அந்த உருவங்கள் முதலில் கொக்கு அல்லது நாரையாக இருக்கலாம் என்று முதலில் கூறப்பட்டது. அது மனித உருவில் இருப்பதால் பேயாக இருக்கலாம் என்றும், தேவதைகளாக இருக்கலாம் என்றும் பொது மக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இவர்கள் வேற்று கிரகத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள். இந்த உருவத்தால் நெல்லூர் பகுதியில் இரவு நேரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், இரண்டு உருவங்கள் பறவைகள் போன்ற தோற்றத்துடன் வானில் பறப்பது பதிவாகியுள்ளது. ஆனால், அந்த வீடியோ தெளிவற்றதாக இருப்பதால், அது பறவைகள் தானா என்பதை உறுதியாகக் கூற இயலவில்லை.

பிரேசிலில் பறந்த கிரேக்க தேவதைகள்

இது போல் கடந்த 2014 ஆ ஆண்டு பிரேசில்  நாட்டில் கிரேக்க தேவதைகள் போல் இறக்கையுடன் பறந்த  மனித உருவங்கள் சிலவற்றை அந்நாட்டை சேர்ந்த போவிஸ்டா எனபவர் வீடியோ எடுத்து யூடியூப்பில் பதிவு செய்து உள்ளார். ஆந்திராவில் பறந்ததாக கூறப்படும் உருவங்கள் பிரேசிலில் பறந்த உருவங்களை போல் ஒத்த தன்மை கொண்டதாக உள்ளது.இந்த வீடியோவை ரிக்கார்டோ ரோகி என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ந்தேதி அப்லோடு செய்து உள்ளார்.

ஆனால் அதே படங்களை வாட்சப்பில் பதிவு செய்து  இவ்வாறுய் புரளியை கிளப்புகிறார்களா என தெரியவில்லை

ad

ad