புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மே, 2015

நீதிமன்ற தாக்குதலில் கைதான மாணவர்களை விடுவியுங்கள்; கூட்டாக இணைந்து ஜனாதிபதியிடம் கோரிக்கை


நீதிமன்ற வளாகம் தாக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டவர்களுள்  பாடசாலை மாணவர்களும் உள்ளனர் எனவே அவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்யுமாறு மாணவர்கள், ஆசிரியர்கள், வடக்கு முதல்வர் மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினர்களும்  கூட்டாக இணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர். 

 
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி  யாழ். வேம்படி  பெண்கள் உயர்தரப்பாடசாலையில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசியல்வாதிகளையும் சந்தித்து கலந்துரையாடினார்.
 
அதன்போதே அனைவரும் கூட்டாக இணைந்து மேற்குறிப்பிட்ட கோரிக்கையினை முன்வைத்தனர். 
 
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 
 
குங்குடுதீவு மாணவி வன்புணர்வின்  பின்னர் கொலை செய்யப்பட்டார்.அதன்பின்னர் யாழ்ப்பாணத்தின்  பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. 
 
கடந்த 20 ஆம் திகதி யாழ்.நீதிமன்றத்திற்கு முன்னால் இடம்பெற்ற போராட்டம் வன்முறையாகமாறி 130 பேரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்தனர்.

 
இவர்களுள் சமபவத்தில் பங்கு கொள்ளாத மாணவர்களும் வேடிக்கை பார்க்க வந்த மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
இவர்களில் பலர் உயர்தரப் பரீட்சையில் தோற்றவுள்ளனர். பரீட்சைக்காலம் நெருங்குவதனால் அப்பாவி மாணவர்களை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என்றும்  கேட்டுக்கொண்டனர்.
 
அத்துடன்  நீதிமன்ற வளாகம் தாக்கப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன. அவற்றை ஜனாதிபதியிடம் வழங்கியதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

 
இதனையடுத்து அவர்கள்  மத்தியில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,  நீதிமன்றம்  தாக்கப்பட்ட விடயம்  தொடர்பில் நான் அறிவேன். அதில் பாடசாலை மாணவர்களும்  கைது செய்யப்பட்டுள்ளனர் என வடக்கு முதல்வர் உள்ளிட்டவர்கள் எனக்கு தெரியப்படுத்தியுள்ளனர். 
 
எனவே மிகவிரைவில் அவர்களுக்கு விசாரணை நடாத்தி குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கப்படுமிடத்தில் விரைவில் விடுதலை செய்யப்படுவர் என்றும் அவர் மேலும்  தெரிவித்தார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=866324052927657005#sthash.35edP088.dpuf

ad

ad