புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

27 மே, 2015

வவுனியாவில் ஆசிரியர் ஒருவர் மூன்று சிறுமிகள் மீது துஸ்பிரயோகம்!

வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியர் ஒருவர் குறித்த பாடசாலையில் கல்வி பயின்ற மூன்று
சிறுமிகளைப் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு வவுனியா பிரதேச செயலாளர் சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸாருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரால் பாடசாலை மாணவிகள் மூவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அங்க சேட்டைகள் விடுதல், தகாத வார்த்தைகள் பிரயோகித்தல் என துஸ்பிரயோகம் செய்துள்ளார். இது தொடர்பில் பிரதேச செயலக சிறுவர் பெண்கள் அலகில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.- என அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த ஆசிரியர் முன்னரும் வேறு பாடசாலை ஒன்றில் மாணவிகளை துஸ்பிரயோகம் செய்தார் என முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமையும் அதன் வழக்கு வலுவிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.