புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மே, 2015

மாத்தறையில் நடைபெறும் மகிந்த ஆதரவு கூட்டத்தில் 75 எம்.பிக்கள்: விமல் வீரவன்ஸ


நல்லாட்சி அரசாங்கம் தனது 150 வது நாளை பூர்த்தி செய்யும் தருணத்தில் நாட்டிற்குள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேவை என்ற மக்கள் நிலைப்பாடு உருவாகியுள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அளுத்கம நகர சபை மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு தெளிவுப்படுத்தும் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி மாத்தறையில் அடுத்த மாதம் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்திற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்து 150 நாட்கள் நெருங்கும் தருணத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டுக்கு மீண்டும் தேவை என்ற மக்கள் நிலைப்பாடு உருவாகியுள்ளதுடன் அது பெரும் மக்கள் அலையாக மாறி வருகிறது என பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.
அதேவேளை அங்கு உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ, எதிர்வரும் 12 ஆம் திகதி மாத்தறையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் 75 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வர போராட்டங்களை நடத்தும் போது, அரசாங்கம் இந்த போராட்டத்தின் கூர்மையை இல்லாமல் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அரசாங்கம் எங்களை சிறைகளில் தள்ள முயற்சித்து வருகிறது. அடுத்தடுத்து 100 சிறைகளில் எம்மை தள்ளினாலும் மகிந்தவை பிரதமராக்க வேண்டும் என்ற எமது போராட்டத்தை இந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் நிறுத்த முடியாது எனவும் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.

ad

ad