புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மே, 2015

மாணவி வித்தியா கொல்லப்பட்ட காணொலி - ஈ.பி.டி.பிக்கு முக்கிய பங்கு - இதோ அனைத்தும் அம்பலம் (வீடியோ

வித்தியாவின் கொலைக்கு வேலணைப் பிரதேசசபைத் தலைவர் போல் (சிவராசா) வும் சம்மந்தப்பட்டுள்ளதாகவும் குற்றவாளிகளைக் காப்பாற்ற பெரும் முயற்சி எடுத்ததாகவும்

குறித்த கற்பழிப்புக் கொலையை அவர்கள் எவ்வாறு செய்தார்கள் என்ற அதிர்ச்சித் தகவல்கள் காணொலியாக வெளியாகியுள்ளது. தமிழ் இனத்திற்கே கேவலமான வேலை செய்த குறித்த ஈனப்பிறவிகளைக் காப்பாற்றுவதற்காக தமிழ்மாறன் என்னும் .................. எவ்வாறு தொழிற்பட்டது என்பன தொடர்பான அதிர்ச்சித் தகவல்களும் இது தொடர்பாக யாழ் மாவட்ட ஐ.தே.க அமைப்பாளர் துவாரகேஸ்வரன் தெரிவிக்கும் அதிர்ச்சித் தகவல்களை முழுமையாக கேளுங்கள் வாசகர்களே!!!!
இந்நிலையில், சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், புங்குடுதீவு பொலிஸ் நிலைய பெண் கான்ஷ்டபிள் ஒருவரை அடுத்த மாதம் திருமணம் செய்ய இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. புங்குடுதீவு வேலனை பிரதேச சபையில் தண்ணீர் பவுஸர் ஓட்டுநராக இருந்த தாக கூறப்படும் குறித்த நபர் , புங்குடுதீவு பொலிஸ் நிலைய தண்ணீர் தாங்கிக்கு நீர் நிரப்பும் பொருட்டு அடிக்கடி அங்கு சென்று வந்துள்ளார். இதன்போது பொலிஸ் அதிகாரிகளுடனுன் நல்ல தொடர்பைப் பேணி வந்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை கொலைசெய்யப்பட்ட மாணவியின் தாயார் , சில காலங்களுக்கு முன்னர் 3 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சியளித்துள்ளமையே கொலைக்கான பிரதான காரணியாக அமைந்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபர்களால் வழங்கப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொலையின் பிரதான சந்தேகநபரும், அவரின் சகாக்களும் குற்றத்தை புரிந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. குற்றத்தை புரிவதற்காக 50,000 ரூபா தருவதாக இணக்கம் காணப்பட்டிருந்த தாகவும், இதன்படி முதலில் 10,000 ரூபா வழங்கப்பட்டிருந்த தாகவும் , குற்றத்தின் பின்னர் மிகுதிப் பணத்தை தருவதற்கு ஒப்பந்த த்தை வழங்கியிருந்தவர் இணங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad