புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மே, 2015

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு ஜேர்மனியில் ஆரம்பம்

தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களது அரசியற் பெருவிருப்பின் சனநாயக வடிவமாக திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது தவணைக்காலத்தின் மூன்றாவது
நேரடி அரசவை ஜேர்மனியின் டோட்முண்ட் நகரில் தொடங்கியது.
மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளின் உணர்வுகளை தாங்கியவாறு மே 22,23,24ம் ஆகிய மூன்று நாட்கள் அமர்வாக இந்த அமர்வு இடம்பெறுகின்றது.
புலம்பெயர் தேங்களில் இருந்தும் நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்கள், மேற்சபைப் பிரதிநிதிகள் மற்றும் சமூக-அரசியற் வள அறிஞர்கள் என பலரும் இந்த அமர்வில் பங்கெடுக்கெடுத்துள்னர்.
பொதுமக்கள், சமூக-அரசியற் ஆர்வலர்கள் பலரும் பார்வையாளர்களாக பங்கெடுத்துள்ள மே22 வெள்ளிக்கிழமை தொடக்க நிகழவில் மாலை பொது கருத்தாடல் நிகழ்வொன்றும் இடம்பெறுகின்றது.
பொதுன வாக்கெடுப்பு, தமிழகம்- புலம் இடையிலான பன்முக தளத்திலான வளர்த்தெடுத்தல், என பல்வேறு விவகாரங்கள் குறித்தான விவாதங்கள், செயல்வடிவங்கள், தீர்மானங்கள் ஆகியன இம்மூன்று நாள் அமர்வின் உள்ளடக்கமாக இருக்கின்றது.
அருள்

ad

ad