புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூன், 2015

பெண்கள் உலக கோப்பை கால்பந்து: சுவிட்சர்லாந்து 10 கோல் அடித்து அசத்தல்


பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியில் சுவிட்சர்லாந்து அணி 10–1 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை பந்தாடியது.

மிரட்டிய சுவிஸ் மங்கைகள் 


பெண்களுக்கான 7–வது உலக கோப்பை கால்பந்து போட்டி கனடாவில் நடந்து வருகிறது. இதில் களம் இறங்கியுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. நேற்று ‘சி’ பிரிவில் நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் அறிமுக அணியான சுவிட்சர்லாந்து, ஈகுவடாரை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சுவிட்சர்லாந்து அணி 10–1 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை துவம்சம் செய்தது. 2–வது பாதியில் மட்டும் 8 கோல்கள் அடிக்கப்பட்டன.

சுவிட்சர்லாந்து வீராங்கனைகள் பாபினே ஹூம், ரமோனா பச்மான் ஆகியோர் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்து அசத்தினர். இதில் பாபினே 47, 49, 52 நிமிடங்களில், அதாவது 5 நிமிட இடைவெளியில் மூன்று கோல்களையும் போட்டார். இதன் மூலம் உலக கோப்பையில் வேகமாக ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தவர் என்ற சாதனையை பாபினே நிகழ்த்தினார். இதற்கு முன்பு ஜப்பானின் மியோ ஓட்டானி 2003–ம் ஆண்டு அர்ஜென்டினாவுக்கு எதிராக ‘ஹாட்ரிக்’ கோல் அடிக்க 8 நிமிடங்கள் எடுத்துக் கொண்டதே இந்த வகையில் சாதனையாக இருந்தது.


மற்றொரு பிரிவில் ஜெர்மனி ஐவரிகொஷ்டை 10-0 என்ற ரீதியில் வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது 
இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜப்பான் அணி 2–1 என்ற கோல் கணக்கில் கேமரூனை வீழ்த்தி 2–வது வெற்றியை பதிவு செய்ததுடன், 2–வது சுற்றுக்கும் முன்னேறியது.

‘டி’ பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 2–0 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவை வென்றது. அமெரிக்கா–சுவீடன் இடையிலான ஆட்டம் கோல் எதுவுமின்றி (0–0) ‘டிரா’ ஆனது.

ad

ad