புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூன், 2015

பெங்களூரு கம்ப்யூட்டர் என்ஜீனியர் கொலை: கைதான மனைவி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் ‘சைக்கோபோல் செயல்பட்டு செக்ஸ் கொடுமை செய்ததால் கொன்றேன்’

கோலார் தங்கவயல்,
பெங்களூரு கம்ப்யூட்டர் என்ஜினீயர் கொலை வழக்கில், அவரது மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ‘செக்ஸ் சைக்கோ‘ போல் செயல்பட்டு தன்னை கொடுமைப்படுத்தியதால் கணவரை தீர்த்துக்கட்டியதாக கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கம்ப்யூட்டர் என்ஜினீயர்ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பண்டகிண்ட கோட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கேசவரெட்டி(வயது 32). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சில்பா. இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. பெங்களூரு பானசவாடியில் வாடகை வீட்டில் தனது மனைவியுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 6–ந் தேதி முதல் கேசவரெட்டி வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அவரை தேடி வந்தனர். இதற்கிடையே 9–ந் தேதி காலையில் கோலார் மாவட்டம் சீனிவாசபூர் தாலுகா காடிரோலகத்த கிராமம் அருகே உள்ள ஏரிக்கரையில் ரத்தக்காயங்களுடன் கேசவரெட்டி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த கவுனிப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
செல்போனால் சிக்கினார்கேசவரெட்டி எப்படி கொலை செய்யப்பட்டார்? என்பது போலீசாருக்கு சவாலாக இருந்தது. இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட கேசவரெட்டியின் சகோதரர் போலீசுக்கு ஒரு முக்கிய தகவல் கொடுத்தார். அதாவது சில்பா தனக்கு போன் செய்து கேசவரெட்டி ஊருக்கு புறப்பட்டு வந்தார். அவர் பாதுகாப்பாக வந்துவிட்டாரா? என்று கேட்டதாக தெரிவித்தார். மேலும் வழக்கமாக சில்பா இதுபோல் என்னிடம் கேட்பதில்லை என்றும் தெரிவித்தார். அதோடு கேசவரெட்டியின் உறவினர்கள் சில்பாவுக்கும் வாசுதேவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. அதன் காரணமாகவே கேசவரெட்டி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் கூறியிருந்தனர்.
அதனை தொடர்ந்து போலீசார் சில்பாவின் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது கொலை நடந்த இரவு அதாவது கடந்த 6–ந் தேதி சில்பா, அவரது தந்தை ராமச்சந்திரா ரெட்டி, உறவினர் வாசுதேவ் ஆகியோரின் செல்போன்கள் கேசவரெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்த சீனிவாசப்பூரில் உள்ள செல்போன் டவர் எல்லைக்குள் இருந்தது தெரிய வந்தது. எனவே கேசவ ரெட்டி கொலையில் சில்பாவுக்கு தொடர்பு இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். அதனைதொடர்ந்து போலீசார் சில்பாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது சில்பா தனது கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
மனைவி கைதுஅதனை தொடர்ந்து கொலை தொடர்பாக சில்பா, அவரது தந்தை ராமச்சந்திரா ரெட்டி, உறவினர் வாசுதேவ் ஆகிய 3 பேரையும் கவுனிப்பள்ளி போலீசார் கைது செய்தனர். கைதான சில்பா உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரணைக்காக தங்கள் காவலில் எடுத்தனர். போலீசார் சில்பா உள்பட கைதான 3 பேர்களிடமும் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
பரபரப்பு வாக்குமூலம்கைதான சில்பா போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் விவரம் வருமாறு:–
“எனது கணவர் கேசவரெட்டிக்கு பணம் மீது அதிக மோகம் இருந்தது. இதனால் அவர் வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். என்னை வீட்டில் இருந்து வெளியே விடாமல், வீட்டிற்குள்ளே சிறைவைத்திருந்தார். மேலும் அவர் எந்த நேரத்தில் வீட்டிற்கு வந்தாலும், உல்லாசம் அனுபவிக்க என்னை கட்டாயப்படுத்தி வந்தார். அதுமட்டுமல்லாமல் நான் யாரிடமாவது பேசினால், அவர்களுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக கூறி ‘சைக்கோ‘ போல் கொடுமைப்படுத்தி வந்தார். அதேபோல் செல்போனில் டுவிட்டர், பேஸ்புக் (முகநூல்), வாட்ஸ்–அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களை பயன்படுத்தவும் என்னை அனுமதிப்பதில்லை.
எனது தந்தை வீட்டில் என்னுடன் வளர்ந்தவர் வாசுதேவா ரெட்டி. இவரும் நானும், அக்காள், தம்பி போல் பழகி வந்தோம். அதனால் அவர் எனது வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றார். ஆனால் எனது கணவர், எனக்கும், வாசுதேவா ரெட்டிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டார். பாலியல் தொல்லை, நடத்தையில் சந்தேகம் என பல்வேறு கொடுமைகளை செய்து வந்தார். இந்த கொடுமை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் கணவர் கேசவரெட்டி மீது எனக்கு வெறுப்பு அதிகரித்தது. அதனால் கணவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.
இரும்பு கம்பியால் தாக்கினோம்அதன்படி கடந்த 6–ந் தேதி இரவு வீட்டிற்கு வந்த கேசவரெட்டிக்கு பாலில் அளவுக்கு அதிகமாக தூக்கமாத்திரை கலந்துகொடுத்தேன். அந்த பாலை குடித்ததும் அவர் தூங்கிவிட்டார். அப்போது நான் இரும்பு கம்பியால் கேசவரெட்டியின் தலையில் அடித்து கொன்றேன். அதன்பிறகு எனது தந்தை ராமச்சந்திரா ரெட்டி, உறவினர் வாசுதேவ் உதவியுடன் கணவரின் உடலை, காடிரோலகத்த கிராமம் அருகே உள்ள ஏரிக்கரையில் வீசினேன்.“
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
கைதானவர்களிடம் கவுனிபள்ளி போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ad

ad