புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூன், 2015

வெள்ளைவான் கடத்தல்கள் விசாரிக்க புதிய ஆணைக்குழு; கருணா , பிள்ளையான், டக்ளஸிடமும் விசாரணை


வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்கள்  தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி  ஆணைக்குழுவின் பருந்துரைக்கமைய ஐந்து பேரடங்கிய
குழு ஒன்று நேற்று முன்தினம்  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி கொழும்பு நீதிமன்ற நீதிபதி பிரியந்த குணவர்த்தன தலைமையில் ஐவரடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.  
 
இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளது என்றும்  ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில், 
 
குறித்த ஐவரடங்கிய குழுவில் தமிழர் ஒருவரையும்  நீதித்துறை சார் வல்லுநர்களையும்  ஒன்றினைத்துள்ளோம்.  ஏற்கனவே கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின்  அடிப்படையில் இவர்கள்  விசாரணைகளை உருவாக்கியுள்ளனர். 
 
வெள்ளைவான்  கடத்தல் தொடர்பிலும்  இராணுவம் உள்ளிட்ட அரசியல்வாதிகளான பிள்ளையான், கருணா , டக்ளஸ் அகியோரையும் விசாரணை செய்யவுள்ளனர் என்றும்  அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ad

ad