புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூன், 2015

36 ஆண்டுகளாக மாணவர்களுக்கு கல்வி உதவியளித்து வரும் நடிகர் சிவகுமார்!

சென்னையில் சிவகுமார் கல்வி அறக்கட்டளை மூலம் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ- மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது .

நடிகர் சிவகுமார் தனது கல்வி அறக்கட்டளை மூலம்  பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்களை எடுத்த மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசளித்து வருகிறார். படிப்பில் சிறந்த மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்காக  தனது 100-வது படம் வெளியான போது, சிவகுமார் இந்த  அறக்கட்டளையை தொடங்கினார். 

இந்த ஆண்டுக்கான மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை சர்.பி.டி.தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் ரொக்கப்பரிசாக வழங்கப்பட்டது. பரிசுகளை நடிகர் சிவகுமாரின் மகனும், நடிகருமான சூர்யா வழங்கினார்.
நிகழ்ச்சியின் போது,  திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும், ஏழை மாணவர்கள் படிக்கும் தாய் தமிழ் பள்ளிக்கு ரூ. 1 லட்சமும், முதல் தலைமுறையாக படிக்கும் ஏழை மாணவர்களின் வளர்ச்சிக்காக பாடுபடும் வாழை இயக்கத்தற்கு ரூ. 2 லட்சமும் சிவக்குமார் கல்வி அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது. 

முன்னதாக நடிகர் கார்த்தி நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் வரவேற்று பேசினார்.  நடிகர் சிவகுமாரின் மகள் பிருந்தா இறை வணக்கம் பாடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். .கடந்த 36 ஆண்டுகளாக நடிகர் சிவகுமார் தகுதியான மாணவ, மாணவிகளை அடையாளம் கண்டு தனது அறக்கட்டளை மூலம் நிதியுதவி செய்து வருகிறார். 

ad

ad