புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூன், 2015

விடுதலை புலி சீருடை ; கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்


விடுதலைப்புலிகளின் சீருடை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இருவரும் சாவகச்சேரி நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்படவுள்ளனர்.
 
கைதடி மேற்குப் பகுதியில் நேற்று பிற்பகல் குறித்த இருவரும் கைது கைது செய்யப்பட்டு விசாரணைக்காக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 
 
மேலும் தெரியவருவதாவது, 
 
புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் வசித்துவரும் இளைஞர் ஒருவர் குறித்த சீருடைகளை தனது உறவினர் வீடு ஒன்றில் வைத்திருந்தாகவும் இரகசிய தகவலின்  அடிப்படையிலேயே குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
 
இவரிடமிருந்து சீருடை ஒன்று , தொப்பிகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த இளைஞனுடன் கைதடியைச் சேர்ந்த மேலுமொரு இளைஞன்  சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
இவர்களிடம்  மேற்கொண்ட விசாரணையில் தனது தம்பி குறித்த சீருடைகளை வைத்திருந்ததாகவும் அவர் வெளிநாட்டிற்குச் சென்ற போது வள்ளிபுனத்தில் இருந்து கைதடிக்கு எடுத்துவந்து அதனை அணிந்து புகைப்படம் எடுத்துவிட்டு உறவினரின் வீட்டிலேயே வைத்துவிட்டு சென்றுவிட்டார் என்றும் விசாரணையில் தெரிவித்துள்ளனர். 
 
தாங்கள்  அணியவில்லை என்றும்  தமக்குஇது குறித்து தெரியாது என்றும்  அவர்கள்  தமது விசாரணையில் தெரிவித்துள்ளதாக பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
மேலும் இன்று குறித்த இருவரும் சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளனர் என்றும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ad

ad