புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜூன், 2015

60,000ரூபா பெறுமதி: கணனிகள் 1,10,000ரூபாவுக்கு கொள்முதல்


60,000 ரூபா பெறுமதியான கணனிகளை 1,10,000 ரூபாவுக்கு கொள்வனவு செய்தே கடந்த அரசாங்கம் தொழில் நுட்ப விஞ்ஞான கூடங்களுக்குப் பகிர்ந்தளித்ததாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
1000 பாடசாலைத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மஹிந்தோதய விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வு
கூடத்துக்கும் 60 கணனிகள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட கல்வியமைச்சர், இவை ஒவ்வொன்றும் 1,10,000 ரூபா வீதமே கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் டி.பி. ஏக்கநாயக்க எம்.பி. எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். மேற்படி கணனி ஒவ்வொன்றையும் 50 அல்லது 60 ஆயிரம் ரூபாவுக்குக் கொள்வனவு செய்திருக்க முடியும். அவ்வாறானால் வீண்விரயமான பணத்தை கல்வித்துறையின் வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தியிருக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதன்போது குறுக்கிட்ட முன்னாள் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் குற்றச்சாட்டை நிராகரித்தார்.
சேறுபூசும் நடவடிக்கையில் அமைச்சர் ஈடுபடக்கூடாது. கணனி கொள்வனவில் மோசடிகள் இடம்பெற்றிருந்தால் கல்வியமைச்சர் அதனை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ad

ad