புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜூன், 2015

ஒருநாள் காதலர்களை நம்பி ஏமாறும் யாழ் யுவதிகள்: அதிர்ச்சி ரிப்போர்ட்!

வடக்கில் பெண்களிற்கெதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், துஷ்பிரயோகங்களிற்கெதிரான குரல்களும்
அதிகரித்து வருகின்றன. புங்குடுதீவு மாணவி கொலையின் பின்னர் இந்த குரல்கள் அதிகரித்து வரும் நிலையில், குடாநாட்டில் சத்தமின்றி நடக்கும் ஒரு அதிர்ச்சி விடயம் தொடர்பில் தீபம் கவனம் செலுத்தியுள்ளது.
யாழ்நகரத்திற்கு பல்வேறு இடங்களிலுமிருந்து கல்வி மற்றும் தொழில் நிமித்தம் வரும் யுவதிகள் தூரஇடங்களிற்கு அழைத்துச் செல்லப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டபின்னர் கைகழுவிவிடப்படும் அதிர்ச்சி சம்பவங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
பேரூந்துகளிலும், வீதிகளிலும் அறிமுகமாகும் ‘திடீர் காதலர்கள்’ தான் இந்த கைவரிசையை காட்டி வருகின்றனர்.
யாழ் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிற்கு குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பல யுவதிகள் வருகிறார்கள். வடமராட்சி, வடமராட்சி கிழக்கு, தீவகம், தென்மராட்சி, பளை பகுதிகளை சேர்ந்த இந்த யுவதிகளை இலக்கு வைத்து வாலிபர் குழுக்கள் அலைகின்றன.
யுவதிகளை தமது வலையில் வீழ்த்தி, தூர இடங்களிற்கு அழைத்து செல்லப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, அந்த இடத்திலேயே கைகழுவிவிட்டு செல்லப்படும் சம்பவங்கள் பல அண்மை நாட்களில் அதிகரித்துள்ளன. இவ்வாறான பல யுவதிகளை பொலிசார் மீட்டு, பெற்றோருடன் இணைத்து வைக்கிறார்கள். கடந்த பத்து நாட்களில் இவ்வாறான இரண்டு யுவதிகளை தாம் மீட்டதாக நெல்லியடி பொலிசார் கூறுகின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் வடமராட்சி குஞ்சர்கடை பகுதியில் யுவதியொருவர் தனிமையில் திருதிருவென விழித்து கொண்டு நிற்கும் தகவல் பொலிசாருக்கு கிடைத்தது. யுவதியை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்ததில், அவர் தீவகம் வேலணையை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. நகரத்தில் அறிமுகமான வாலிபர் ஒருவருடன் சென்றுள்ளார். அச்சுவேலிக்கு யுவதியை அழைத்து வந்து உல்லாசம் அனுபவித்து விட்டு தலைமறைவாகிவிட்டார்.
யுவதியின் பெற்றோரை அழைத்து இருதரப்பிற்கும் புத்திமதி கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
இதேபோன்று கலிகை சந்தியிலும் ஒரு யுவதியை அண்மையில் மீட்டதாக பொலிசார் கூறுகின்றனர்.
பளையிலும் இவ்வாறான மூன்று சம்பவங்கள் கடந்த ஒரு மாதத்தில் நடந்துள்ளன.
யாழ் நகர பொலிசாரும் இப்படியான சம்பவங்கள் நடப்பதை உறுதி செய்கின்றனர். எனினும், அதுகுறித்த மேலதிக தரவுகளை தர மறுத்து விட்டனர்.
பெண்களிற்கெதிரான வன்முறைகள் அதிகரித்துவிட்டதென தொடர்ந்து குரல்கள் எழுந்து வரும் நிலையில் பெற்றோரின் பொறுப்பற்ற நடவடிக்கையும், யுவதிகளின் முன்யோசனையற்ற செயல்களும் இதற்கு ஒரு காரணமென பொலிசார் கவலை தெரிவிக்கின்றனர். அத்துடன், தூர இடங்களிற்கு செல்லும் பெண்பிள்ளைகள் தொடர்பில் அக்கறையுடனிருக்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நமது சமூகம் பெரும் சீரிழிவை எதிர்கொண்டுவரும் நெருக்கடியான காலகட்டத்தில் வழிப்புடனிருந்து, வாழ்வை பாதுகாத்து கொள்வது ஒவ்வொருவரின் கடமையென்பதுடன், இந்த விடயத்தில் பெற்றோரின் அதிகரித்த பொறுப்புணர்வும் மிக அவசியமானதாகும்.thx deepam

ad

ad