புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜூன், 2015

நாடாளுமன்றம் உடனடியாக கலைக்கப்படாது: அனைத்து இன மக்களும் இணைந்து செயற்படுவதே நல்லிணக்கமாகும்: ஜனாதிபதி


பயப்படாது பிரதியமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொள்ளுங்கள், உடனடியாக நாடாளுமன்றம் கலைக்கப்படமாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிதாக பதவியேற்றுக் கொண்ட பிரதியமைச்சர்களிடம் கூறியுள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்ட பிரதியமைச்சர்கள், நியமனங்களை பெறும் முன்னர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினர். சுமார் ஒரு வார காலத்திற்கு தமக்கு அமைச்சு பதவிகள் அவசியமில்லை என அவர்கள் ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, பயப்படாமல் பதவிகளை ஏற்குமாறும் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் தன்னிடமே இருப்பதாகவும் கூறியுள்ளார்.
அனைத்து மாவட்டங்களுக்கும் அமைச்சர்களை நியமித்து கட்சியை கீழ் மட்டத்தில் இருந்து வலுப்படுத்திய பின்னரே நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்தப்படும்.
சில நேரம் வருட இறுதி வரை நாடாளுமன்றம் கலைக்கப்படாது எனவும் இதனால், அமைச்சு பதவிகளை பெற்று தமக்கு ஆதரவு வழங்குமாறு ஜனாதிபதி கேட்டுள்ளார்.
ஜனாதிபதியின் பதிலால் திருப்தியடைந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் ஜயசூரிய,திலங்க சுமதிபால உள்ளிட்ட 4 பேர் பிரதியமைச்சர் பதவிகளை பெற சம்மதித்துள்ளனர்.
 மாத்தறை மாவட்டத்தில் மங்கள சமரவீர மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோரை பலவீனப்படுத்தும் நோக்கில் சனத் ஜயசூரியவும், விஜய தஹநாயக்கவும் பிரதியமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து இன மக்களும் இணைந்து செயற்படுவதே நல்லிணக்கமாகும்: ஜனாதிபதி
அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் நல்லிணக்கத்திற்கான அடிப்படையை உருவாக்க முடியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நல்ல பண்புகள் மற்றும் செயற்திறனுடைய பிரஜைகள் நாட்டின் அபிவிருத்திக்கு அவசியப்படுகின்றனர். தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானத்தின் ஊடாக புரட்சிகரமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இவற்றுடன் ஒப்பீடு செய்யும் போது மனிதனின் ஒழுக்கம் மற்றும் பண்புகள் விருத்தியடைந்துள்ளனவா என்பது கேள்விக்குறியேயாகும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கொள்ளுப்பிட்டி புனித அந்தோனியார் மகளிர் கல்லூரியின் 75ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் இன்று முற்பகல் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க உள்ளிட்ட தரப்பினரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad