புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூலை, 2015

தமிழர்களின் உரிமைகளை வெல்ல ஒன்றுபட்டு வாக்களிப்பதே ஒரே வழி இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் முன்னணியின் தலைவர்


தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வாக்களித்து அதிக எம்.பிக்களைப் பெறுகின்ற போதுதான் புதிய அரசியல் உரிமைகளை வெல்வதற்கான அழுத்தங்களை
பிரயோகிக்க முடியுமென இந்திய இலங்கை வம்சாவளி மக்கள் முன்னணியின் தலைவர் முத்தப்பன் செட்டியார் தெரிவித்துள்ளார்.
தமது அலுவலகத்தில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தல் பற்றிய கலந்துரையாடலின் போது மேலும் தெரிவித்துள்ளதாவது, நல்லாட்சிக்கான 100 நாள் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி அவர்கள் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கி மலையக கட்சிகளினது தொழிற் சங்கத் தலைவர்களான திகாம்பரம், வேலாயுதம், ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு தேசிய அரசில் அமைச்சு பதவிகளை வழங்கினார்.
100 நாள் வேலைத்திட்டத்தில் எமது மக்களுக்கு உருப்படியான எதுவும் புதிதாக கிடைக்கவில்லை. பாராளுமன்ற தேர்தலை நோக்காக கொண்டு மலையக அமைச்சர்கள் செயற்பட்டமையால் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இந்த உணமைகள் கசக்கலாம். நமக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை இவர்கள் நழுவ விட்டுள்ளனர். அடுத்த ஆட்சியில் செய்து தருவதாக கூறினாலும் இது பற்றி மக்கள் சிந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்தகால அரசால் ஆரம்பித்து வைக் கப்பட்ட திட்டங்களான தோட்டப் பிர தேச ஆசிரியர் உதவியாளர் நியமனம், கல்விக் கட்டிடங்கள் திறப்பு ஆகியன மட்டுமே கல்வி இராஜாங்க அமைச்சர் ராதா கிருஷ்ணரால் முடித்து வைக்கப்பட்டன.
தோட்ட அபிவிருத்தி நிதியத்தால் (ஹிஞிஸிஷிஹி) கட்டப்பட்ட வீடுகளுக்கான உறுதியை கூட தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் திகாம்பரத்தின் அமைச்சால் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பெருந்தோட்ட ராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம் அவர்களால் உரிமையற்ற பிரயோசனம் இல்லாத, காணி உரிமை நிச்சயம் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்த முடியாத பசுமை பூமி கடிதம் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
மலையக மக்களின் முக்கியமான தோட்ட கம்பனிகளின் கட்டுப்பாட்டி லில்லாத காணி, வீடு உரிமைக்கான சட்ட மூலத்தையாவது ஜனாதிபதி அவர்களது பணிப்புடன் நிறைவேற்றி யிருக்கலாம். அல்லது ஐ.தே.க. சார்ந்த தொழிற்சங்க செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான வேலாயுதம் தமது கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூலம் நிறைவேற்ற செய்திருக்கலாம். அத்தோடு புதிய தேர்தலுக்கு முன் நியாயமான சம்பள அதிகரிப்பை தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திட செய்திருக்கலாம்.
ஆறுமுகம் தொண்டமான் அரசின் அமைச்சராக இருந்த போது பலமுறை ஒப்பந்தம் செய்ய முடிந்ததை போல் பெருந்தோட்ட ராஜாங்க அமைச்சரால் செய்ய முடியாமல் போனது அவரின் இயலாமை காரணமாகும். இது கவலைக்குரியது.

ad

ad