புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூலை, 2015

தமிழர்கள் பரந்துவாழும் வட -கிழக்கு தவிர்ந்த ஏனைய இடங்களிலும் போட்டியிடுமாறும் தமிழரசுக்கட்சி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு கோரிக்கை

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வசிக்கும் தமிழ் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும்
வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி கோரியுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர், ‘கடந்த கால வன்செயல்களைத் தொடர்ந்து வடக்கு, கிழக்கில் வாழ்ந்த மக்கள் பெருமளவில் வடக்கு மற்றும் கிழக்குக்கு வெளியில் தற்போதும் வாழ்ந்து வருகின்றார்கள்;’ என்பது தொடர்பிலும் சுட்டிக்காட்டியுள்ளனர். ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனின் தலைமையில் தமிழ்க் கட்சிகள் பல, வடக்கு, கிழக்குக்கு வெளியே ஒன்றிணைந்துள்ளன. மனோ கணேசனை தலைமையாகக் கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணியில் ஒன்றிணைந்துள்ள தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, தேர்தலில் ஒன்றிணைந்து வடக்கு, கிழக்குக்கு வெளியில் போட்டியிட கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு வடக்கு, கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழ் மக்களின் வாக்குகளை பெறும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தனது வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் எனவும் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ad

ad