புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

1 ஜூலை, 2015

வித்தியின் தலைமையில் முன்னாள் போராளிகள் தேர்தலில்?

பொதுத் தேர்தல் நெருங்கிவரும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முன்னாள் போராளிகளும் அவர்களது ஆதரவாளர்களும், நலன்விரும்பிகளும், ஜனநாயகக்
கட்டமைப்பு ரீதியாக தாம் ஆற்றவிரும்புகின்ற – தாம் ஆற்றக்கூடிய  – பங்கு பணி குறித்து ஒன்றுகூடி ஆராயவிருக்கின்றனர்.
சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர் என்.வித்தியாதரனின் ஒருங்கிணைப்பில் வடமாகாணத்தில் உள்ள முன்னாள் சிரேஷ்ட போராளிகள் பலர் எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடுகின்றனர்.
தங்கள் தீர்மானம் குறித்து பெரும்பாலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர் மாநாடு ஒன்று கூட்டி அவர்கள் பகிரங்கமாக அறிவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முயற்சியானது முன்னாள் போராளிகள் அடங்கிய புதிய அணி யொன்றினை தேர்தலில் களமிறக்குவதற்காக இருக்கலாம் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்!