புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஆக., 2015

மட்டக்களப்பில் மு.கா.45ஆயிரம் வாக்குளை பெற்றால் நான் வென்றாலும் நாடாளுமன்றம் செல்லமாட்டேன்: அமீர் அலி


கிழக்கு மாகாண முதலமைச்சர் கூறியிருப்பது போல ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 45,000 வாக்குகளைப் பெற்றால்,  நான் வெற்றி பெற்றாலும் நாடாளுமன்றம் செல்லமாட்டேன் என முன்னாள் பிரதியமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
அதேபோல், 45,000 வாக்குகளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெறாவிட்டால் கிழக்கு மாகாண முதலமைச்சர் அவரது முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்வாரா என சவால் விடுத்தார்.
 மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், மட்டக்களப்பு மாவட்டத்தில் 45,000 வாக்குகளைப் பெற்று ஆசனத்தை பெறும்.
முஸ்லிம் காங்கிரஸினால் அந்த வாக்குகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருபோதும் பெறமுடியாது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு ஆசனங்களை பெறுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்று ஆசனங்களைப் பெற்று முதலிடத்துக்கு வந்தால் ஐக்கிய தேசியக் கட்சி தான் அடுத்த இடத்துக்கு வரும். இன ஐக்கியத்தையும் சமூக ஒற்றுமையையும் கட்டியெழுப்பி இந்த மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தமது செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றது என்றார்.

ad

ad