புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஆக., 2015

மைத்திரிபால சிறிசேனவினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
அரசாங்கத்தை அமைப்பதற்கான மிகக் குறைந்த ஆசனங்களான 113 ஆசனங்கைள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெறும் நிலையில், பிரதமராகும் வாய்ப்பை, இதுவரை பிரமராக வாய்ப்பை பெற்றிடாத ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேரந்த சிரேஷ்ட தலைவர்களில் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
அவ்வாறு 113 ஆசனங்களை பெற தவறும் பட்சத்தில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற வகையில் அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான ஆசனங்களைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பேன் எனவும் அதில் தெரிவித்துள்ளார்.
 
இதன்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு பிரதமராவதற்கான எவ்வித வாய்ப்பும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
 
இது குறித்து அவர் எழுதிய முழுக் கடிதத்தினது பிரதி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
 

ad

ad