புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஆக., 2015

வாலு பட இழுபறி நீடிக்கிறதா .


வாலுவின் வரலாறு’ என்று தனி புத்தகமே போடுமளவிற்கு ட்விஸ்டுகளும், ஏமாற்றங்களும், எதிர்பார்ப்புகளும் நிறைந்திருக்கிறது வாலு பட ரிலீஸ் விவகாரத்தில். ’எல்லா பிரச்சனைகளும் முடிந்துவிட்டது. வாலு ரிலீஸை இனி யாரும் தடுக்கமுடியாது’ என டி.ஆர் திட்டவட்டமாக அறிவித்தபின்பும் ரிலீஸில் ஏதோ இழுபறி என தகவல் வெளியாக, டி.ஆர் இன்று வைத்திருந்த பிரஸ் மீட் அதை உறுதி செய்தது.



டி.ஆர் பேசியபோது “வாலு பட ரிலீஸில் விஜய் எங்களுக்கு பக்கபலமாக இருந்தது உண்மைதான். ஆனால் அவர் எந்த பண உதவியும் செய்யவில்லை. அவர் எங்களுக்கு மாரல்(Moral) சப்போர்ட் மட்டும் தான் கொடுத்தார். வாலு படம் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 14-ஆம் தேதி ரிலீஸாகும். மற்ற ஊரிலெல்லாம் தியேட்டர்கள் புக் ஆகிவிட்டது. சென்னையில் மட்டும் தான் தியேட்டர்கள் கிடைக்கவில்லை” என்றார்.

வாலு படத்திற்கு சென்னையில் தியேட்டர் கிடைக்காததற்கு உதயநிதி தயாரிப்பில் உருவாகும் VSOP திரைப்படம் தான் காரணம். உதயநிதியின் ரெட் ஜியண்ட் பேனரில் அதிக படங்கள் ரிலீஸாவதால் உதயநிதி படத்தை தவிர்த்து வேறு படத்தை எடுக்க யோசிக்கிறார்களாம் தியேட்டர்காரர்கள். இதை மறைமுகமாக சொன்னவரே டி.ஆர் தான். எனவே இனி சிம்பு சினி ஆர்ட்ஸ் பேனரில் தொடர்ந்து படங்கள் தயாரித்தும், வாங்கி வெளியிடுவதும் நடைபெறும் என்றும் கூறியிருக்கிறார்.


ஆனால் சமூக வலைதளங்களில் இயங்கும் சிம்பு ரசிகர்களோ உதயநிதியை கிழி கிழியென கிழித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத உதயநிதியும் களத்தில் இறங்கி ஒரு பிடி பிடித்துவிட்டார்.

ட்விட்டரில் உதயநிதி “நான் எப்படி வாலு படத்தின் ரிலீஸை நிறுத்தமுடியும். லாஜிக் இல்லாமல் பேசுவதையும், நீங்களாக ஒரு முடிவுக்கு வருவதையும் விட்டுவிடுங்கள். ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் தங்கள் படம் முக்கியம். எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்து சிறப்பான படங்களை தர நினைக்கிறோம். அதற்காக அடுத்த படங்களை வீழ்த்த வேண்டும் என்ற அவசியமில்லை. அடுத்தமுறையாவது கொஞ்சம் அறிவுடன் பேசுங்கள். என்னை ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக்கியதற்கு நன்றி. நான் எந்த நடிகருக்கும், நடிகரின்  ரசிகர்களுக்கும் எதிரானவன் இல்லை. மூளையை(அப்படி ஒன்று இருந்தால்) கொஞ்சமாவது உபயோகித்து பேசுங்கள்” என கொட்டி தீர்த்துவிட்டார்.

தடைகளை தாண்டி வாலு திட்டமிட்டபடி ஆகஸ்ட் 14 ரிலீஸ். விஜய்யின் புலி பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் உட்பட விஜய் படத்திற்கு வேலை செய்யும் பல விநியோகிஸ்தர்களும் களத்தில் இறங்கி வாலு திரைப்படத்திற்காக வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்.

ad

ad