புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2015

கோத்தபாய - பசில் மோதல்! மஹிந்த பிறப்பித்த கடுமையான உத்தரவு


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்காக பல்வேறு அர்ப்பணிப்புக்களை மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, இம்முறை நாடாளுமன்ற தேர்தல் நடவடிக்கைகளில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் சந்தர்ப்பத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் ஏற்பட்ட மோதலே இதற்கான காரணமென அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
பசில் ராஜபக்சவை பின்பற்றுவோர்களான ஜகத் வெள்ளவத்தை, தம்ம திசாநாயக்க, விஜித நாணயக்கார, நிமால் பண்டார மற்றும் ஊடகவியலாளரான சஞ்சீவ உட்பட சிலரினால் முன்னணிக்கான விஞ்ஞாபனம் தயாரித்திருந்த சந்தர்ப்பத்தில், கோத்தபாய ராஜபக்சவின் அறிவுரைக்கமைய தயான் ஜயதிலக, நாலக கொடஹேவா, சரித ஹேரத் உட்பட சிலர் இன்னும் ஒரு விஞ்ஞாபனத்தை தயாரித்துள்ளனர்.
இதற்கு மேலதிகமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகர்கள் சிலர் விஞ்ஞாபனத்திற்கான பல கொள்கைகளை உள்ளடக்கியுள்ளனர்.
எப்படியிருப்பினும் பசில் ராஜபக்ச தரப்பினரால் தயாரிக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடுவதற்கான அனைத்து ஆயத்தங்களும் மேற்கொள்ளப்பட்டிருந்த வேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்சவை திட்டியதோடு அவரது தேர்தல் விஞ்ஞாபன பிரதிகளை தீ வைக்குமாறு தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் சமீபத்தில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் கோத்தபாய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமையவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுரைக்கமைய தயாரிக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனமாகும்.
இதன் காரணமாகவே தான் பசில் ராஜபக்ச தனது தேர்தல் நடவடிக்கைகளில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad