புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2015

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை தடியடி: அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு


பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

பூரண மது விலக்கு கோரி போராட்டம் நடத்திய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் ஆரோக்கியதாஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

மாணவர்கள் தாக்கப்பட்டதற்கான போட்டோ, வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகவும் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி கவுல், நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. 

மாணவர்கள் டாஸ்மாக் கடையை சூறையாடியது தவறு என தெரிவித்த நீதிபதிகள், சட்டத்தை கையில் எடுத்து மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தனர். மேலும் மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்கவும் நீதிபதிகள் மறுத்து விட்டனர்

ad

ad