புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஆக., 2015

பூரண மதுவிலக்கு கோரி விஜயகாந்த் தலைமையில் கோயம்பேடு முதல் கோட்டைவரை மனித சங்கிலி



பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி விஜயகாந்த் தலைமையிலும், பிரேமலதா விஜயகாந்த் முன்னிலையிலும் கோயம்பேடு முதல் கோட்டைவரை மனிதசங்கிலி போராட்டம் நடைபெறும் என்றும், இதேபோல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், மனிதசங்கிலி போராட்டம் நடைபெறும் என்றும் தேமுதிக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தவேண்டியதன் அவசியத்தை அதிமுக அரசு இன்னும் உணர்ந்ததாக தெரியவில்லை. மதுவினால் இரண்டு தலைமுறைகள் பாதிக்கப்பட்டு, மூன்றாவது தலைமுறையும், பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தாய்மார்கள் பதறுகிறார்கள், மதுவின் பிடியில் இருந்து தமிழகத்தை காப்பாற்ற, அனைத்துதரப்பினரும் ஒன்று சேர்ந்து குரல் எழுப்புகிறார்கள். 

ஆனால் அதிமுக அரசோ அதையெல்லாம் பொருட்படுத்தாமல், மது விற்பனையால் வரும் வருமானத்திற்காக ஏழை, எளிய நடுத்தரமக்களை மதுவுக்கு பலியாக்கி வருகிறது. 

தமிழகத்தில் மதுவினால் ஏற்பட்டுள்ள சீரழிவை தடுத்து நிறுத்திட, பூரண மதுவிலக்கை வலியுறுத்தி வருகின்ற 06.08.2015 வியாழக்கிழமை அன்று மாலை 4 மணி முதல் 5 மணி தேமுதிக சார்பில் கழகத்தலைவர்  விஜயகாந்த் தலைமையிலும், பிரேமலதா விஜயகாந்த் முன்னிலையிலும் கோயம்பேடு முதல் கோட்டைவரை மனிதசங்கிலி போராட்டம் அகிம்சை வழியில் நடைபெறும். 

மேலும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், மனிதசங்கிலி போராட்டம் நடைபெறும். இந்த மனிதசங்கலி போராட்டத்திற்கு தாய்மார்களும், சகோதர சகோதரிகளும், இளைஞர்களும், கல்லூரி மாணவ மாணவிகளும், தொழிலாளர்களும், வர்த்தக நிறுவனத்தினர்களும், பொதுமக்களும், கழக நிர்வாகிகளும், கழகத்தொண்டர்களும்  என அனைவரும் பெருந்திரளாக வருகைதந்து இந்த மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டு வெற்றி பெறச்செய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ad

ad