புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஆக., 2015

ஒரே நாளில் 857 ஆபாச இணையத்தளங்கள் முடக்கம்


ஆபாச இணையதளங்களை முடக்குமாறு, இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனைத்  தொடர்ந்து இந்தியாவில்
சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
 
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க ஆபாச இணையங்கள் ஒரு காரணம் என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக உள்ளது. இந்நிலையில், ஆபாச இணையங்களை முடக்க உத்தரவிட கோரி, உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு அதன் விசாரணை தொடர்கிறது...
 
 
இந்த மனு மீது அண்மையில்  நடந்த விசாரணையின் போது, "நான்கு சுவற்றுக்குள் ஒரு தனிநபர் ஆபாச வெப்சைட்டுகளை பார்ப்பதை, சுப்ரீம் கோர்ட் தடுக்க முடியாது. இது தனது அடிப்படை சுதந்திரத்துக்கு எதிரான செயல் என ஒரு நபர் நீதிமன்றில் முறையிட்டால் என்ன செய்வது" என்று தலைமை நீதிபதி தத்து தலைமையிலான பெஞ்ச் கேள்வி எழுப்பியிருந்தது. 
 
மேலும், இதுபோன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு வேண்டுமானால் எடுக்கலாம் என நீதிபதிகள் கூறியிருந்தனர்.
 
இருப்பினும், நீதிமன்றில்  வழக்கு நிலுவையிலுள்ளதை கருத்தில் கொண்டு, மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம், திடீரென ஆபாச இணையங்களை  தடை செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. பிரபலமாக உள்ள சுமார் 857 ஆபாச இணையதளங்களை முடக்க இணையதள சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
 
தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 79ன் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒளிபரப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வோடபோன், எம்டிஎன்எல், ஆக்ட், ஹாத்வே மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய இணையதள சேவை வழங்கு நிறுவனங்கள், உடனடியாக 857 ஆபாச இணையங்களையும் தடை செய்துள்ளன
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=799294179203165492#sthash.PcNFu1sz.dpuf

ad

ad