
கதிர்காமம் மாணிக்க கங்கையில் நேற்று முதலையொன்றுக்கு இறையாகிய ஒருவரின் சடலத்தை இன்று காலை மீட்டுள்ளனர்.
கதிர்காமம் பிரதேசத்தில் ஐந்து சுழியோடிகள் மேற்கொண்ட தேடுதலின் பின்னர், இன்று காலை 7.00 மணிக்கு இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கதிர்காமம் விகாரைக்கு வணக்க வழிபாட்டில் கலந்துகொள்வதற்காக சென்ற ஒருவர் எனவும் தெரிவிக்கப்படுவதுடன், இவருடன் நீராடிக்கொண்டிருந்தவர்கள் பார்த்துக்கொண்டு இருந்த வேளையிலே இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.