புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஆக., 2015

வன்முறையை தூண்டியது வைகோ தான்: நத்தம் விஸ்வநாதன்

அரசியல் ஆதாயத்திற்காக தான் பல்வேறு கட்சிகள் மதுவிலக்கு பற்றி பேசுகின்றன என தமிழக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சசிபெருமாள் இறப்பை வைத்து அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது. அருவருக்கத்தக்கது. சசிபெருமாள் மரணம் வேதனையளித்தாலும், அவரது போராட்டம் காந்தியவழியில் இல்லை. இதனை வைத்து அரசுக்கும், முதல்வருக்கும் களங்கம் செய்வதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். மதுவின் ஊற்றுக்கண்ணாக விளங்குவது தி.மு.க., தான்.1971ல் மதுவிலக்கை ரத்து செய்த கருணாநிதி அது பற்றி பேசட்டும். 5 பேரின் மது ஆலைகளுக்கு அனுமதி அளித்தவர் கருணாநிதி. தமிழக அரசுக்கு எதுவும் இல்லாததால் தான் மதுவிலக்கு பற்றி பேச்சு. பா.ஜ., காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் மதுவிலக்கு அமல்படுத்தப்படவில்லை. பா.ஜ., ஆளும் மாநிலங்களில் மதுவிலக்கை அமல்படுத்திவிட்டு தமிழிசை பேசட்டும். கலிங்கப்பட்டியில் கடந்த 2009 ம் ஆண்டு முதல் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அங்கு, வைகோ தான் வன்முறையை கட்டவிழ்த்து விட்டார். புகையிலை நிறுவனத்தில், வைகோவின் பங்குதாரராக உள்ளார். இதற்கு வைகோவின் பதில் என்ன? அரசியல் நெருக்கடி என்ன என திருமாவளவன் விளக்கம் அளிக்க வேண்டும். உதிரிக்கட்சிகள் பந்த் நடத்துவது சாத்தான் வேதம் ஓதுவது போல் ஆகும். அரசியல் லாபம் தேடுபவர்களை பற்றி தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும். மத வழிபாட்டு தளங்கல், பள்ளி கல்லூரிகள் அருகே மதுபான கடைகள் ஏதும் இல்லை. தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து 504 கடைகள் அகற்றப்பட்டுள்ளன என கூறியுள்ளார்

ad

ad