சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்த ஆட்டங்களில் முதலில் இடம்பெற்ற ஆட்டத்தில் அல்மனார் மத்திய மகாவித்தியாலய அணியை எதிர்த்து ஒல்சென்ற் மத்திய மகாவித்தியாலய அணி மோதிக் கொண்டது. இதில் அல்மனார் மத்திய மகாவித்தியாலய அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இரண்டாவதாக இடம்பெற்ற ஆட்டத்தில் மருதானை மத்திய மகாவித்தியாலய அணியை எதிர்த்து ஷீச்மன் கல்லூரி அணி மோதிக் கொண்டது. இதில் மருதானை மத்திய மகாவித்தியாலய அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மூன்றாவதாக இடம்பெற்ற ஆட்டத்தில் ஹேவாவிதாரண வித்தியாலய அணியை எதிர்த்து ருவன்வெலி மத்திய மகா வித்தியாலய அணி மோதிக் கொண்டது. இதில் ஹேவா விதாரண வித்தியாலய அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
நான்காவதாக இடம்பெற்ற ஆட்டத்தில் நீர்கொழும்பு மரியஸ்ரொல கல்லூரி அணியை எதிர்த்து அனுராதபுரம் சென்.ஜோசப் கல்லூரி அணி மோதிக் கொண்டது. இதில் நீர்கொழும்பு மரியஸ்ரொல கல்லூரி அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஐந்தாவதாக இடம்பெற்ற ஆட்டத்தில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து பதுளை அல்அதான் வித்தியாலய அணி மோதிக் கொண்டது. இதில் பதுளை அல்அதான் வித்தியாலய அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஆறாவதாக இடம்பெற்ற ஆட்டத்தில் முருங்கன் மகாவித்தியாலய அணியை எதிர்த்து மாவனல்லை சாஹிராக் கல்லூரி அணி மோதியது. இதில் இரண்டு அணியினரும் ஆட்ட நேர முடிவில் எதுவித கோல்களையும் பெறாததினால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. சமநிலை தவிர்ப்பு உதைகளில் மாவனல்லை சாஹிராக் கல்லூரி அணி 4:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.