புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2015

மிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்வரை எதிர்க்கட்சியிலேயே இருப்பேன் – தலைவர் இரா.சம்பந்தன்

தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக்கொள்வதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கமென்றும், தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்
வரை எதிர்க்கட்சியிலேயே இருக்க விரும்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
திருமலை குச்சவெளி பிரதேச பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கையில் இதுவரை நடைபெற்ற உள்நாட்டு விசாரணைக்கு எவ்வித பலனும் கிடைக்கவில்லையென குறிப்பிட்ட அவர், இதனாலேயே மக்கள் சர்வதேச விசாரணையை கோரி நிற்பதாக குறிப்பிட்டார்.
குறிப்பாக கடந்த 2006ஆம் ஆண்டு திருகோணமலையில் 5 மாணவர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை மற்றும் மூதூரில் 17 தொண்டர் நிறுவன ஊழியர்கள் படுகொலை செய்யபட்டமைக்கு, உள்ளூரில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு அதற்கு சர்வதேச நீதிபதிகள் ஆலோசனை வழங்கினர். எனினும், உள்நாட்டில் நேர்மையான விசாரணை நடத்த முடியாதென தெரிவித்து அவர்களே ஓடிவிட்ட நிலையில், உள்நாட்டு விசாரணைகள் எவ்வாறு சாத்தியமாகுமென அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதன் காரணமாகவே, இலங்கையில் நடைபெற்றது இன அழிப்பெனவும் அதற்கும் சர்வதேச விசாரணை அவசியமெனவும், தமிழகத்திலும் இலங்கையின் வட மாகாண சபையிலும் பிரேரரணை நிறைவேற்றபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் ஐ.நாவும் சர்வதேச சமூகமும் அக்கறை காட்டி வரும் நிலையில், தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென சம்பந்தன் மேலம் வலியுறுத்தியுள்ளா

ad

ad