புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2015

தனி நாட்டுக் கோரிக்கை முன்வைப்பவர்கள் பிரிந்து சென்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உணர்த்தும் வகையில் அரசின் செயல்பாடுகள் அமைந்திருக்க வேண்டும்.மனோ கணேசன்

நாடு பிளவுபடுவதன் அபாயத்தை உணர்ந்தால் அது தொடர்பான கோரிக்கை தவிர்க்கப்படும்! அமைச்சர் 
நாடு பிளவுபட்டால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உணரச் செய்தால் மாத்திரமே அது தொடர்பான கோரிக்கையை கைவிடச் செய்ய முடியும் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் இன்றைய திவயின வாரஇதழுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் இதனை வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் மனோ, முன்னைய அரசின் காலத்தில் இயங்கிய தேசிய நல்லிணக்க அமைச்சை விட எனது தேசிய கலந்துரையாடலுக்கான அமைச்சு அதிகாரம் கூடியது. அத்துடன் இன்றைய அரச தலைமை நாட்டு மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த நேர்மையான அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றது.
அதன் காரணமாக எனது அமைச்சின் ஊடாக நேர்மையான முறையில் தேசிய நல்லிணக்கத்துக்கான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் சூழல் உருவாகியுள்ளது.
அதிகாரப் பரவலாக்கல் மூலமாக மட்டுமே இந்நாட்டின் நல்லிணக்கத்துக்குத் தடையாக இருக்கும் இனப்பிரச்சினையை தீர்க்க முடியும். அதற்கு ஏதுவாக தனி நாட்டுக் கோரிக்கை முன்வைப்பவர்கள் அவ்வாறு பிரிந்து சென்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உணர்த்தும் வகையில் அரசின் செயல்பாடுகள் அமைந்திருக்க வேண்டும்.
அவ்வாறு பாதிப்புகளை உணர்ந்து கொண்டால் அவர்களும் பிரிவினை தொடர்பான கோரிக்கைகளை கைவிட்டு விடுவார்கள். நாட்டின் அனைத்து மக்களும் சமமான உரிமைகளுடன் வாழும் சூழலும் ஏற்படும் என்றும் அமைச்சர் மனோ கணேசன் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

ad

ad