புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2015

பல்கலை மாணவியின் சாவில் தாயார் சந்தேகம்

நெருப்பில் எரிந்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் முல்லைத்தீவைச் சேர்ந்த யாழ்.பல்கலைக்கழக மாணவியின் சாவில் தனக்குச் சந்தேகம் இருப்பதாக அ
வருடைய தாயார் நீதிமன்றத்தில்முறையிட்டதைத் தொடர்ந்து அது குறித்து பூரண விசாரணை செய்து மன்றுக்கு அறிக்கை சமர்ப் பிக்குமாறு பொலிசாருக்கு யாழ். நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

கடந்த ஜூலை மாதம் 6 ஆம் திகதி திருநெல்வேலி, பாற்பண்ணைப் பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்து வந்த முல்லைத்தீவைச் சேர்ந்த பல்கலைக்கழகமாணவியொருவர் மண்ணெண்ணெய் ஊற்றித் தனக்குத்தானே தீ வைத்து கொண்டதாகத் தெரிவித்து அவரைப்பதிவுத் திருமணம் செய்து கொண்ட யாழ்.மருத்துவ பீட மாணவனால்வைத்தியசாலையில் சேர்க்கப்பட் டார்
யாழ்போதனா வைத்திய சாலையில் 3 நாள்கள் சிகிச்சை பெற்றும் அது பயனளிக்காமல் அவர் 9 ஆம் திகதி சாவடைந்தார். 
வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த இருவரும் பெற்றோருக்குத் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்து ஒன்றாக வாழ்ந்து வந்ததாகவும், பின்னர் அது பெற்றோருக்குத் தெரியவந்ததால் திருமணம் தொடர்பாகப் பெண் வீட்டார் மதம் மாறுவதற்கு வற்புறுத்தியதால் ஏற்பட்ட பிணக்குக் காரணமாகவே மாணவி தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இந்த வழக்கு யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்குஎடுக்கப்பட்டபோது இறந்த மாணவியின் தாயார் சார்பாகத் தோன்றிய சட்டத்தரணி, இந்தச் சாவு தொடர்பாகச் சந்தேகம் இருப்பதாகவும், மாணவி 3 நாள்களாகவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் தாயாரைப் பார்க்கவில்லையெனவும், மாணவியைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டவர் மருத்துவபீடமாணவரென்பதால் முறையற்ற செல்வாக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதா எனச்சந்தேகம் உள்ள தாகவும் மன்றுக்கு விண்ணப்பித்தார். 
இதனையடுத்து மேற்படிகட்ட ளையை வழங்கிய நீதிமன்றம் வழக்கு விசாரணையை எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தது.

ad

ad