புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 அக்., 2015

சர்வதேச சமூகம் மூலம் புலிகள் சரணடைய முயன்றனர்! – ஏற்றுக்கொள்கிறார் கோத்தபாய

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சர்வதேச சமூகத்தின் ஊடாக விடுதலைப் புலிகள் சரணடைய எத்தனித்தனர் என முன்னாள்
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எனினும், சரணடைதல் தொடர்பில் விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் எவ்வித நேரடி இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் சரணடைந்த போது, கொலை செய்யப்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பிரதானமாக குற்றம்சுமத்தப்படுகிறது. இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இலங்கைக்கான நோர்வே தூதுவராக கடமையாற்றிய டோர் ஹாட்ரெமிடம் இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட முடியும்.
2009ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி ஹாட்ரெம், பௌத்தலோக்க மாவத்தையில் அமைந்துள்ள எனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வந்தார். புலிகள் சரணடைய விரும்புவதாக கூறினார். “தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் தம்மைத் தொடர்பு கொண்டு, சரணடைய விரும்புவதாக கூறினார்” என ஹாட்ரெம் குறிப்பிட்டார்.
புலித்தேவனும் சில உறுப்பினர்களும் அவர்களது குடும்பங்களும் சரணடைய விரும்புவதாக புலித்தேவன் கூறினார் என்ற தகவலை ஹட்ரெம் என்னிடம் பரிமாறிக் கொண்டார். புலித்தேவனுடன், ஹாட்ரெம் தொலைபேசி ஊடாக தொடர்புகளைப் பேணி வந்தார். எவ்வாறெனினும், சரணடைவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்க முடியவில்லை. யார் சரணடைய விரும்புகின்றார்கள் என்பது பற்றிய ஆள் அடையாள விபரங்களை புலித்தேவனைத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள ஹாட்ரெமினால் முடியாமல் போய்விட்டது.
ஆள் அடையாளத்தை உறுதி செய்து சரணடையச் செய்ய வேண்டும் என்பதே என்னுடைய தீர்மானம். புலித்தேவனை தொடர்பு கொள்ள முடியவில்லை என ஹட்ரெம் குறுஞ் செய்தியொன்றை தமக்கு அனுப்பி வைத்திருந்தார். இதனால் சரணடையும் முயற்சி தோல்வியடைந்தது. சில மணித்தியாலங்களின் பின்னர் விடுதலைப் புலிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக இறுதி முயற்சியை மேற்கொண்டனர்.
உண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைவதாகக் கூறி எம்மீது இறுதித் தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தனர். விடுதலைப் புலிகளின் முக்கியமான உறுப்பினர்கள் சரணடைய முயற்சித்த விவகாரம் தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அப்போதைய இலங்கைக் கிளைத் தலைவர் போல் கெஸ்டெல்லாவிடமும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
சரணடைவதற்காக, முன்னரங்கப் பகுதிகளின் பாதுகாப்பு கட்டமைப்புக்களை தளர்த்துவோம் என தமிழீழ விடுதலைப் புலிகள் கருதினர். அமெரிக்காவின் இலங்கைத் தூதரகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட கேபிள் தகல்வல்களின் அடிப்படையில் விக்கிலீக்சும் இந்த விடயம் பற்றிய தகவல்களை வெளியிட்டிருந்தது. புலிகள் சரணடைவது தொடர்பில் இலங்கையுடன் தொடர்புகளைப் பேணிய வெளிநாட்டு தரப்புக்கள் பற்றிய அனைத்து விபரங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது.
இலங்கை யுத்தம் தொடர்பிலான பல்வேறு தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது. விக்கிலீக்ஸ் தகவல்களை விசாரணை செய்யும் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமா என்பது கேள்விக்குறியே.
2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16ம் திகதி, ஹாட்ரெம், பசில் ராஜபக்ஸவிற்கு குறிப்பு ஒன்றை அனுப்பி வைத்திருந்தார். அதில் வன்னி கிழக்கு களமுனையில் பொதுமக்கள் சிக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை விடுவிக்காது தடுத்து வைத்திருப்பதாகவும் ஹாட்ரெம், பெசிலுக்கு அறிவித்திருந்தார். புலிகள், சிக்கியுள்ள பொதுமக்களை தற்போதைக்கு விடுவிப்பார்கள் என்ற நம்பிக்கையில்லை எனவும் அது வருத்தமளிப்பதாகவும் ஹாட்ரெம் கையொப்பமிட்டு பசிலுக்கு அனுப்பிய குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பொதுமக்களை புலிகள் பணயமாக வைத்திருந்த போது யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி அரசாங்கத்துடன் தொடர்புகளைப் பேணிய சர்வதேச சமூகத்தின் எவரும், பொதுமக்களை விடுவிப்பதற்காக குரல் கொடுக்கவில்லை. பொதுமக்களை விடுதலை செய்யுமாறு தமிழீழ விடுதலைப் புலிகளிடம் எந்தவொரு சர்வதேச தரப்பும் கோரவில்லை.
விடுதலைப் புலிகள் மேற்கொண்ட யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில், யுத்த காலத்தில் இலங்கையில் கடமையாற்றிய ஐக்கிய நாடுகள் அமைப்பு அதிகாரிகள் சாட்சியமளிக்க முடியும். பொதுமக்களை விடுதலை செய்ய முயற்சித்த தமிழ் பேசும் ஐக்கிய நாடுகள் உத்தியோகத்தர்களை புலிகள் சிறைபிடித்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad