வடமாகாண சபையின் 36ஆவது அமர்வுகள் இன்று காலை 9மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன.
வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெறும் இந்த அமர்வில் வடமாகாணசபையின் எதிர்க்கட்சி புதிய உறுப்பினராக ஒருவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
வடமாகாணசபையிலிருந்து தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவான அங்கஜனுக்கு பதிலாக, சிவக்கொழுந்து அகிலதாஸ் எதிர்க்கட்சி உறுப்பினராக இன்றைய தினம் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.