புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 நவ., 2015

வடமாகாண சபை உறுப்பினர்களது பொலிஸ் பாதுகாப்பு திடீர் வாபஸ்


வடமாகாணசபை உறுப்பினர்கள், மற்றும் எதிர்கட்சி தலைவர் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நேற்றய தினம் வாபஸ் பெறப்பட்டிருக்கும் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு மாகாணசபை முறைப்பாடு கொடுக்கும் என அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார்.
மாகாணசபை உறுப்பினர்களுக்கு ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு பொலிஸார் பெறுவதற்கான ஒழுங்குகள் உள்ளபோதும், மாகாணசபை உறுப்பினர்கள் ஒருசிலர் தவிர்ந்த மற்றய உறுப்பினர்கள் மேலும் சில அமைச்சர்கள் குறித்த பொலிஸ் பாதுகாப்பை பெற்றுக் கொள்ளாமல் இருந்து வருகின்றனர்
இந்நிலையில் பாதுகாப்பை பெற்றிருந்த மாகாணசபை உறுப்பினர்களான திருமதி.அனந்தி, க.விந்தன், எஸ்.சுகிர்தன், பா.கஜதீபன் மற்றும் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா ஆகியோர் தமது பாதுகாப்பு நேற்றய தினம் திடீரென வாபஸ் பெறப்பட்டு பொலிஸார் திருப்பி அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்துடன் தொடர்பு கொண்டு கேட் டபோது குறித்த மாதிரியான சம்பவம் கிழக்கு மாகாணத்திலும் இடம்பெற்றதாக அறிகின்றோம்.
இங்கேயும் எமது உறுப்பினர்கள் தமக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். எனவே இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஊடாக முறைப்பாடு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். என அவைத்தலைவர் தெரிவித்துள்ளார்.

ad

ad