புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 நவ., 2015

வல்வெட்டித்துறையினில் நினைவு விளையாட்டுப்போட்டி!

மாவீரர் தின அச்சத்தினில் அலைந்து திரியும் இலங்கை படையினரை தாண்டி நினைவேந்தல் சுற்றுப்போட்டியொன்றை நடத்தி சாதித்துள்ளனர் வல்வெட்டித்துறை நெற்கொழு விளையாட்டுக்கழகத்தினர்.இலங்கை விமானப்படையினரின் குண்டுவீச்சினில் கொல்லப்பட்ட மூன்று இளைஞர்கள் ஞாபகார்த்தமாக இச்சுற்றுப்போட்டி நடத்தப்பட்டுள்ளது.
முன்னதாக விளையாட்டுப்போட்டியை நிறுத்துமாறு ஏற்பாட்டளர்களிற்கு தொலைபேசி வழியே கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.அதனையும் தாண்டி இன்றிரவு சுற்றுப்போட்டி நடத்தப்பட்டிருந்த நிலையினில் நான்கு அடுக்குகளினில் படையினர் நிலைகொள்ள வைக்கப்பட்ட விளையாட்டுக்கழக வீரர்கள்,வீராங்கனைகள் அச்சுறுத்தப்பட்டு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
எனினும் தடைகளை தாண்டி ஆறு விளையாட்டுக்கழகங்கள் சுற்றுப்போட்டியினில் குதித்திருந்த நிலையினில் இறுதி நேர முயற்சியாக மின்சாரத்தை படையினர் துண்டித்துள்ளனர்.
பலத்த பிரயத்தனத்தின் பின்னர் மின்சாரத்தை மீளப்பெற்று சுற்றுப்போட்டியினை நடத்தி பரிசில்களை வழங்கிய பின்னரே அனைவரும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

ad

ad