புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2015

லெப் கொமாண்டர் வெலெகெதரவே இரகசிய வதைமுகாமில் விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவுகளை வழங்கினார்:

லெப் கொமாண்டர் வெலெகெதர என்பவரே விசாரணைகளை மேற்கொள்வதற்கான உத்தரவுகளை வழங்கியதாக, இலங்கையின்
இரகசிய வதைமுகாம்களில் இருந்து உயிர் தப்பி வெளிநாடுகளில் வாழ்பவர்கள்  தெரிவித்துள்ளனர்.  இதனை சர்வதேச நீதி மற்றும் உண்மைக்கான திட்டம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

2009 முதல் 2012 ம் ஆண்டிற்கு இடைப்பட்ட பகுதியில் திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள வதை முகாமில் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஓருவர் தாங்கள் மேற்கொண்ட ஆய்வின் போது தங்களிடம் இதனை தெரிவித்துள்ளார் என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

எங்களை முதன்முதலில் அந்த இரகசிய முகாமிற்கு அவர்கள் கொண்டுசென்ற வேளை அதற்கு பொறுப்பாக லெப்கொமாண்டர் வெலெகெதர என்பவர் காணப்பட்டார். அவர் தனிப்பட்ட ரீதியில் என்னை துன்புறுத்தவில்லை, ஆனால் நான் விசாரிக்கப்பட்ட ஓவ்வொருதடவையும் அவரே அதற்கான உத்தரவை பிறப்பித்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.

அந்த வதை முகாமில் காணப்பட்ட இரகசிய அறைகளின் சுவர்களில் கூரான ஆயுதங்களால் நபர்களின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளதையும், இரத்தக்கறைகளையும் நான் பார்த்தேன். நான் அலறல் கதறல் சத்தங்களையும் கேட்டிருக்கின்றேன். அவர்கள் சித்திரவதை செய்யப்படுகின்றனர் போல எனக்கு தோன்றியது. ஒவ்வொரு நாளும் நான் அலறல்களை கேட்பேன் என அந்த நபர் குறிப்பிட்டார் என சர்வதேசநீதி மற்றும் உண்மைக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

ad

ad