புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2015

சமந்தா பவர் இன்று இலங்கை வருகிறார்


ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர பிரதிநிதி சமந்தா பவர் இன்று சனிக்கிழமை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
ஆசிய நாடுகளுக்கான விஜயத்தில் ஈடுப்பட்டிருக்கும் இவர் எதிர்வரும் 23ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன்போது இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கான இருதரப்பு உறவினை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், சிரேஷ்ட அதிகாரிகள், சிவில் சமூகத்தினர் மற்றும் பொது மக்களையும் சந்தித்து உரையாடவுள்ளார்.
மேலும் யாழ். பயணத்தை மேற்கொள்ளும் போது உள்நாட்டு ஊடகவியலாளர்களை சந்திப்பதோடு யாழ் நூலகத்தையும் பார்வையிட இருப்பதாக கூறப்படுகிறது.
இதேவேளை யுத்தத்தின் போது சேதமடைந்த ஒஸ்மானியா கல்லூரியின் புதிய கட்டட திறப்பு விழாவிலும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad