புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 டிச., 2015

வடக்கின் அபிவிருத்திக்கு இந்தியா உதவியளிக்கும் : துணைத்தூதுவர் நடராஜன் தெரிவிப்பு

வடக்கு மாகாணத்தின் பொருளாதார அபிவிருத்திக்கு இந்திய அரசு உதவும் என்று யாழ். இந்தியத் துணைத்தூதுவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண வர்த்தகக் கைத்தொழில் சம்மேளனமும் தேசிய தொழில் முயற்சியாளர் அதிகார சபையும் இணைந்து நடத்திய வடக்கு மாகாண சுயதொழில் முயற்சியாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கின் பொருளாதார அபிவிருத்திக்குச் சுயதொழில் முயற்சியாளர்கள் முக்கிய பங்காற்றுவதைப் பார்க்கின்றபோது பூரிப்பாக இருக்கின்றது. வடக்கின் பொருளாதார அபிவிருத்திக்கு நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம். 

அடுத்த வருடத்தில் தென்னிந்தியாவில் இருந்து முதலீட்டாளர்கள் இங்கு வருவதற்கான எற்பாடுகள் மேற்கொள்ளப்படும். அதேபோன்று வடக்கின் உற்பத்திப் பொருள்களை அங்கு கொண்டு சென்று நீங்கள் விற்பனை செய்யவேண்டும். இரு நாடுகளிடையேயான உறவுகள் இன்னும் பலப்படவேண்டும். அடுத்த வருடம் இந்தியாவில் இருந்து பால் மாடுகளை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். 

இந்தச் செயற்பாடு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வவுனியா பிரதேசத்தில் இந்திய அரசின் அனுசரணையோடு மேற்கொள்ளப்பட்ட பொருளாதார மேம்பாட்டுக்கு உதவக்கூடிய மல்லிகை தோட்டங்களை குறிப்பாக மதுரை மல்லிகை இனத்தினை அறிமுகப்படுத்துகின்ற செயற்பாட்டின் தொடர்ச்சியாக இடம்பெறும்.

வடக்கு, கிழக்கின் பொருளாதார அபிவிருத்திக்கு வடமாகாண அரசு, மத்திய அரசு மாத்திரமன்றி தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் புலம்பெயர் தேசத்தவர்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்றார்.

இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், கெளரவ விருந்தினராக வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவனும் கலந்து கொண்டனர்.

ad

ad