புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 டிச., 2015

தமிழக உறவுகழுக்கு கைகொடுப்போம்-சுவிஸ் ஈழத்தமிழரவை

சுவிஸ் வாழ்தமிழர்களிடமும் ஏனய புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களிடமும் உரிமையுடன் ஒரு வேண்டுகோளை விடுக்கின்றோம்.

இயற்கையின் சீற்றம் காரணமாக எமது தாய்த்தமிழகத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் எமது தொப்பிள்ககொடி உறவுகள் உயிரிழந்தும் உடமையிழந்தும் பாரிய இன்னல்களுக்கு மத்தியில் இடம்பெயரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு அன்றாட உணவிற்கும் குடிநீருக்கும் ஏங்கித்தவித்தவண்ணம் உள்ளார்கள்.
இவர்களின் இப் பிரச்னையைப் போக்கவேண்டியது எமது தலையாய தார்மீக  கடமையாகும்.
FB_IMG_1449240513754
எங்களை சிங்களப் பயங்கரவாத அரசு 2009ல் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கும்போது எங்கள் தொப்பிள்க்கொடி உறவுகள் பாரியபோராட்டங்களை முன்னேடுத்தும் தீக்கு இரையாகி மத்திய அரசை இலங்கையில் போரை நிறுத்துமாறு தங்களாலான அளுத்தங்களைக்கொடுத்து உயிர்திதாகம் செய்தார்கள். அதேபோன்று எமக்கு இன்னல்கள் நேரும்பெழுதெல்லாம் எமக்கு உறுதுணையாக நினின்று முதலில் குரல்கொடுப்பார்கள் இப்பொழுதும் கெடுத்துக்கொண்டே வருகிறாற்கள். அவர்களை நாம் பிரித்துப் பார்க்கமுடியாது. ஆகவே எமது உறவுகளுக்கு ஏற்பட்டிருக்கும் தற்பதற்போதைய பிரச்சினையைப் போக்க புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டும்.
FB_IMG_1449240498848
தற்சமயம் அவர்களுக்கு சமைத்த உணவும் குடிநீரும் அவசரமாக தேவைப்படுகிறது இத்தேவைக்கான நிதியினை அவர்களுக்கு வழங்குவதற்கு சுவிஸ் ஈழத்தமிழரவையான நாம் முன்வந்துள்ளோம் அதேபோல் மனிதநேயம் கொண்ட புலம்பெயர் தமிழ் உறவுகள் அனைவரும் இணைந்து உங்களாலான உதவிகலை வழங்குமாறு தாழ்மையுடனும் உரிமையுடனும் வேண்டி நிற்கின்றோம்.
உதவிகளை வழங்க உடனே தொடர்புகொள்ளவும்:
                                                                              குருசாமி குருபரன் : +4179 193 86 69
ஜெகன்மோகன் காண்டீபன் :+4176 328 58 99FB_IMG_1449240507713
அருந்தவநாயகம் பிரபாகரன்: +41787212216
வங்கிக் கணக்கு:
Postscheck-Konto, PostFinance AG, Mingerstrasse 20, 3030 Bern
Konto: 60-720663-0
IBAN: CH1809000000607206630
Inhaber: SCET – Swiss Council of Eelam Tamils, Wegmühlegässli 60,
        3072 Ostermundigen
                                                                                          நீங்கள் வழங்கும் உதவிகளுக்கான கணக்கறிக்கை உடனுக்குடன் எமது இணையதளத்திலும், முகப்புத்தகத்திலும் அறியலாம்.

ad

ad