புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 டிச., 2015

மஹிந்தவும் மைத்திரியும் முதல் தடவையாக நாடாளுமன்றில் நேருக்கு நேர் சந்திப்பு!

நாடாளுமன்றத்துக்கு வருகைதந்து வரவு - செலவுத்திட்டத்தை விமர்சிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அஞ்சுகின்றார் என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில், அவர் இன்று சபைக்கு வருகைதந்து விவாதத்திலும் பங்கேற்றார். அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபாலவும் நாடாளுமன்றத்தில் முதல் தடவையாக நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர்.

நாடாளுமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதம் ஆரம்பமானது.

விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கையில் முற்பகல் 11.20 மணியளவில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட எம்.பி. மஹிந்த ராஜபக்ஷ சபைக்குள் வந்தார். நாமல் எம்.பி. உட்பட எம்.பிக்கள் சிலர் அவர் சகிதம் வந்தனர். 5 நிமிடங்கள் அமர்ந்திருந்த அவர் 11.25 மணிக்கு சபையிலிருந்து வெளியேறினார். மஹிந்த இவ்வாறு வெளியேறிய பின்னர் 11.35 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபைக்குள் வந்தார்.

பாதுகாப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தி ல் உரையாற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால தயாரானபோது 12 மணியளவில் மஹிந்த எம்.பி. மீண்டும் சபைக்கு வந்து மைத்திரியின் உரையைக் கவனமாக செவிமடுத்தார். அத்துடன், சட்டம், ஒழுங்கு அமைச்சு மீதான விவாதத்தை மஹிந்த எம்.பி. ஆரம்பித்து வைத்து உரையாற்றினார்.

மைத்திரிபால சிறிசேன மஹிந்தவின் அமைச்சரவையிலிருந்து பொதுவேட்பாளராகக் களமிறங்கி ஜனாதிபதியாகிய பின்னர் மஹிந்தவும் அவரும் ஒரே சமயத்தில் நாடாளுமன்றில் சந்தித்ததில்லை. நேற்றைய தினமே இவ்வாறு சந்தித்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், தனக்குக் கீழ் இருக்கும் அமைச்சு தொடர்பில் நாடாளுமன்றத்தில் இடம்பெறும் விவாதத்தில் ஜனாதிபதியொருவர் பங்குபற்றி உரையாற்றிய சம்பவம் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை பதிவாகியது. நேற்று வெள்ளிக்கிழமையும் பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில் ஜனாதிபதி உரையாற்றினார்.மஹிந்தவும் மைத்திரியும் முதல் தடவையாக நாடாளுமன்றில் நேருக்கு நேர் சந்திப்பு!

ad

ad