புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 டிச., 2015

காஞ்சிபுரத்தில் பலி 100 ஆனது ; மழையால் பலி 500 - ஐ தாண்டும்

தொடர்ந்து பெய்து வரும் மழையால் இறந்தவர்கள் எண்ணிக்கை அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக ஏதும் வெளியிடப்படவில்லை.
இருப்பினும் ஆங்காங்கே இருந்து வரும் தகவலின்படி தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 500 -ஐ தொடும் என அஞ்சப்டுகிறது.
தொடர் மழை காரணமாக பல வீடுகளை வெள்ளம் சூழ்ந்த காரணத்தினால் பலரும் மழை நீரில் சிக்கினர், பல அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் கீழ் தளம், 2 வது தளம் வரை வெள்ளம் சூழ்ந்தது , மின்சாரம் இல்லாமல் பெரும் சிரமத்தை சந்தித்தனர் , குடிக்க தண்ணீர் உணவு இல்லாமல் பலர் தங்களின் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர் பலர் குளிர் தாங்க முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர் .
இவ்வாறு பல்வேறு இன்னல்களை சந்தித்து பலர் இறந்துள்ளனர் .இதில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மத்திய அரசின் விவரப்படி 269 பேர் இறந்துள்ளதாக கூறப்பட்டது. கடந்த 4 நாட்களில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை வெள்ள நீர் சூழ்ந்து பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கின இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 பேர் இறந்தள்ளதாகவும், ஆஸ்பத்திரிகளில் செயற்கை சுவாசம் செயல்படாததால் 14 பேர் மூச்சு திணறி இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது போல் சென்னையில் நேற்று இரவில் மட்டும் 20 க்கும் மேற்பட்ட பிணங்கள் மீட்கப்பட்டுள்ளன பலர் காணாமல் போயுள்ளனர் .இதனால் மழை வெள்ளம் பலி குறித்து போக போகத்தான் தெரிய வரும் எனவே பலி எண்ணிக்கை 500 - ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது.

ad

ad