புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

8 டிச., 2015

முஸ்லிம் லீக் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஒரு மாத ஊதியத்தை தமிழக வெள்ள நிவாரணப் பணிக்கு அளிக்கின்றனர்முஸ்லிம் லீக் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை தமிழக வெள்ள நிவாரணப் பணிக்கு அளிக்கின்றனர்

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சார்பில் சென்னை ,கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன .

அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கேரளா மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி உறுப்பினர்கள் தத்தமது ஒரு மாத ஊதியத்தை தமிழகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெறும்  வெள்ள நிவாரப் பணிக்கு அளித்துள்ளனர் .

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பாய் ,போர்வை ,ஆடைகள் ,பால் ,குழந்தைகளுக்கு தேவையான பால் பவுடர்கள் உள்ளிட்ட பொருட்களாக வழங்கப்பட்டு வருகின்றது