புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

8 டிச., 2015

திருகோணமலை கடற்பரப்பில் ஏராளமான சடலங்கள் கரை ஒதுங்குவதாகத் தகவல்


இது குறித்து ஆய்வு மேற்கொள்ள, இலங்கை காவற் துறையினரும், கடற்படையினரும் இரண்டு படகுகளில் அங்கு சென்றுள்ளனர்.
முன்னதாக வெளியான தகவல்களின் படி, ஐந்து மனித சடலங்கள் குறித்த படகில் மிதப்பதாகவும், அவற்றில் 2 பெண்களின் சடலங்களும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் அவர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையில் இன்று காலை கரை ஒதுங்கிய சடலத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய கால்டாக்சி ஓட்டுநரான பூமிதுரையின் அடையாள அட்டை இருந்தது தெரியவந்துள்ளது.
இதேபோல் அப்பகுதியில் ஒதுங்கிய உடல்களும் சென்னை வெள்ளம் காவு கொண்டோருடையதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.