புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

8 டிச., 2015

வெள்ளத்தில் சென்னை /திரையுலக செய்திகள்

வீதி வீதியாக அழைந்து உதவி செய்த இளையராஜா - Cineulagam

வீதி வீதியாக அழைந்து உதவி செய்த இளையராஜா

தமிழ் சினிமாவின் கௌரவமாக நாம் நினைக்கும் ஒரு
சிலரில்இளையராஜாவும் ஒருவர். இவர் கடந்த சில நாட்களாகவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிதியுதவி மற்றும் ஆறுதல் கூறி வருகிறார்.
தற்போது இரண்டாவது நாளாக நேற்றும் சென்னையில் உள்ள பல தெருக்களுக்கு வீதி வீதியாக சென்று மக்கள் குறை கேட்டு அதை பூர்த்தி செய்து வருகி
றார்.
இந்நிலையில் 1 லட்சம் போர்வைகளை இளையராஜா வழங்கியுள்ளார். இதைக்கண்ட மக்கள் அனைவரும் அவரை மனதார பாராட்டியுள்ளனர்.

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அள்ளிக்கொடுத்த ரகுமான்
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமானவர்ஏ.ஆர்.ரகுமான். இவர் சமீபத்தில் சென்னை மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மிகவும் வருந்தி ஒரு சில கருத்துக்களை வெளியிட்டார்.
சமீபத்தில் வந்த தகவலின்படி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரகுமான் ரூ 25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளாராம்.
இதுமட்டுமின்றி பல பிரபலங்கள் தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகின்றனர்.
கடலூர் முழுவதும் சிவகார்த்திகேயன் பேச்சு தானாம்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவர்சிவகார்த்திகேயன். இவர் மிகவும் சிரமப்பட்டு தான் இந்த உயரத்தை அடைந்தார்.
இந்நிலையில் சென்னை மட்டுமின்றி கடலூரிலும் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலரும் தற்போது தான் கடலூரை கவணிக்க ஆரம்பித்துள்ளனர்.
ஆனால், சிவகார்த்திகேயன் ஆரம்பத்திலேயே பல உதவிகளை செய்துள்ளாராம். இதை டுவிட்டரில் ரசிகர் ஒருவர் ‘என்ன சார் கடலூரில் எங்கு சென்றாலும் உங்களை பற்றி தான் பேச்சு’ என்று கூறியுள்ளார்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் சென்று அதை மட்டும் செய்யாதீர்கள்- ஜெயம் ரவி வேண்டுக்கோள்
தனி ஒருவன் 100வது நாள் வெற்றியெல்லாம் ஓரங்கட்டி மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார் ஜெயம் ரவி. இவர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல உதவிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்தார். அதில் அவர், ஒரு செய்தியை குறிப்பிட்டுயிருந்தார்.
அது என்னவென்றால், 'உதவி செய்யுங்கள், ஆனால், அவர்களிடம் நின்று போட்டோ எடுத்துக்கொள்ளாதீர்கள்' என கூறியிருந்தார்.
சத்தியமாக யாராலும் முடியாது- சித்தார்த்
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓடி ஓடி உதவியவர் சித்தார்த். இவர் இன்று கடலூர் சென்றுள்ளார்
இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தமிழக முதல்வரால் தான் இத்தனை சீக்கிரம் இயல்பு நிலைக்கு வர முடிந்தது.
வேறு எந்த மாநிலத்திலும் இப்படி ஆகியிருந்தால் இத்தனை சீக்கிரம்மீண்டிருக்க முடியாது, என தமிழக முதல்வரை புகழ்ந்துள்ளார்.
ஹன்சிகாவிற்கு நன்றி தெரிவித்த டிடி
தன் கலகல பேச்சால் அனைவரையும் கவர்ந்து இழுத்தவர் டிடி. இவர் தான் சின்னத்திரை பெண் தொகுப்பாளர்களில் நம்பர் 1.
இவர் சென்னையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். இது மட்டுமின்றி தன் சமூக வலைத்தள பக்கத்தில் பல விழிப்புணர்வு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் சென்னை நிவாரணத்திற்கு ஹன்சிகா ரூ 15 லட்சம் கொடுத்துள்ளார். இதற்கு பிரபலங்களில் முதல் ஆளாக தன் நன்றியை டிடி, ஹன்சிகாவிற்கு கூறியுள்ளார்.

மக்களுக்காக இப்படி இறங்கினாரா பார்த்திபன்? படம் உள்ளே

எப்போதும் தன் படங்களில் தொடர்ந்து புரட்சிகரமான களத்தை தொடுபவர் பார்த்திபன். இவர் சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அவர் பல உதவிகளை செய்தார்.
இதில் ஒரு படி மேலே சென்று தானே தண்ணீரல் இறங்கி மக்களுடன் இணைந்து வேலை பார்த்தார்.
இதைக்கண்ட மக்கள் அனைவரும் சினிமாவில் மட்டுமில்லை நிஜத்திலும் பார்த்திபன் ஹீரோ தான் என்று கூறியுள்ளனர்.
 படமா முக்கியம்? களத்தில் விஷால்
விஷால் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். சினிமா மட்டுமின்றி மக்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது சென்னை மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து தன்னால் முடிந்த உதவியை ஓடி ஓடி செய்கிறார்.
இந்நிலையில் கதகளி படத்தின் டப்பிங் வேலை மீதமிருக்க, படமா முக்கியம்? மக்கள் குறை முதலில் தீரட்டும் என களத்தில் இறங்கி வேலை செய்து வருகிறார். சபாஷ் விஷால்.
கமல்ஹாசன் மீது உச்சக்கட்ட கோபத்தில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அளவிற்கு கொண்டு சென்றவர் கமல். இவர் சமீபத்தில் ஏற்பட்ட மழையால் மக்கள் அவதிப்படுவதை கண்டு அரசாங்கத்திற்கு எதிராக சில கேள்விகளை எழுப்பினார்.
இதில் முக்கியமாக ‘மக்களின் வரிப்பணம் எங்கு சென்றது’ என இவர் கேட்டதாக கூறப்பட்டது. இதை இளைஞர்கள் பலரும் வரவேற்றனர். கமலை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர்.
ஆனால், நான் அப்படி சொல்லவேயில்லை, என கமல் மீண்டும் நேற்று கூறியது ரசிகர்களை அதிர்ச்சி மட்டுமின்றி கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது.
வெள்ள நிவாரணம்... நடிகர் ஷாரூக்கான் ரூ 1 கோடி அறிவிப்புசென்னை வெள்ள நிவாரணத்துக்காக ரூ 1 கோடியைத் தருவதாக நடிகர் ஷாரூக்கான் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "சென்னை மாநகரம் சமீபத்திய புயல் மழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து வேதனை அடைகிறேன்.
அதே நேரம், இந்த சோதனையும் துயரமும் மிக்க தருணத்தில் சென்னை மக்களின் அமைதியும், ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு கடுமையான சூழலிருந்து மேலெழுந்து வரும் பாங்கும் எங்களை பெருமைப்பட வைக்கிறது.
இந்தத் துயரிலிருந்து மக்களைக் காக்க உங்கள் அரசும் பிறரும் மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பாராட்டுகிறோம். சென்னை மக்களின் துயர் துடைக்க எங்கள் ரெட் சில்லி நிறுவனம் மற்றும் தில்வாலே படக்குழுவின் சார்பாக ரூ 1 கோடியை வழங்குகிறோம். தயவு செய்து இந்தத் தொகையை ஏற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய நடிகர்களில் இதுவரை யாரும் வழங்காத பெரும் தொகையை ஷாரூக்கான் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை–கடலூரில் விஜய் ரசிகர்கள் வெள்ள நிவாரண உதவி
சென்னையில் பெய்த கனமழையால் சென்னை நகரமே பெரும் சேதம் அடைந்துள்ளது. பொதுமக்கள் பலரும் அடிப்படை உதவிகூட கிடைக்காமல் பெரும் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து, அவர்களுக்கு உதவ பலரும் முன்வந்து பல்வேறு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பிற மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய் ஏற்பாட்டில் சென்னை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்கள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.
இவற்றை அகில இந்திய விஜய் மக்கள் இயக்க தலைவர் ஆனந்த், ஈரோடு மாண்டல தலைவர் பாலாஜி, நெல்லை மாவட்ட தலைவர் ஷஜி கடலூர் மாவட்ட தலைவர் சீனு ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார்கள்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 3 நாட்கள் முகாம் நடத்தும் சூர்யா
வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த சென்னையில் தற்போது தான் இயல்வு வாழ்க்கை மெதுவாக திரும்பி வருகிறது. ஆனால் பல்வேறு இடங்களில் தேங்கியிருக்கும் நீர் மற்றும் குவிந்து கிடக்கும் குப்பையால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை எத்திராஜ் கல்லூரியுடன் சேர்ந்து இலவச மருத்துவ முகாமை 3 நாள் நடத்துகிறது.
இன்று துவங்கியுள்ள முகாம் வரும் 9ம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்கள் மருத்துவ உதவியை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தினமும் காலை 9 மணி முதல் முகாம் நடைபெறும். தன்னார்வலர்களுக்கு டிடி ஊசிக்கு அகரம் அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ரியல் ஹீரோ சித்தார்த் தின் அடுத்த பயணம் இங்கே யா
சென்னையில் பெய்த பேய் மழையில் சிக்கி தவித்த மக்களுக்கு தமிழ் நடிகர்களான சித்தார்த் முதல் ஆளாக பெரு வெள்ளம் என்று பாராமல் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவி செய்து வந்தார்.
சினிமா வில் மட்டும் ஹீரோவாக இல்லாமல் பசியால் வாடிய பல பேரை காப்பற்றி ரியல் லைப் லும் ரியல் ஹீரோவாக திகழ்ந்தார். இந்நிலையில் இவரின் அடுத்த பயணத்தை பற்றி அவரது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நான் அடுத்து கடலூர் ரை நோக்கி செல்ல உள்ளேன், அங்கு இருக்கும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் உணவுகள் கொடுக்கவுள்ளேன் . மேலும் எந்தெந்த பகுதிக்கு உதவி வேண்டுமென்று நான் சமுக வலைத்தளத்தில் குறிபிட்டுள்ள #Ashtag பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மழையால் தவித்த சென்னை மக்களுக்கு, போட்டி போட்டு உதவிய காமெடி நடிகர்கள்மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு காமெடி நடிகர்களான மயில்சாமி, இமான் ஆகியோர் உணவுகளை வழங்கி உதவிகள் செய்து வருகின்றனர்.

சென்னையில் மழையால் பாதிப்படைந்த பகுதிகளுக்கு சென்று நடிக, நடிகையர் நேரடியாக உதவிகள் செய்து வருகின்றனர். மக்களுக்குத் தேவைப்படும் குடிநீர், உணவு, போர்வைகள் மற்றும் பிற அத்தியாவசியமான பொருட்களை இவர்கள் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் காமெடி நடிகர்கள் மயில்சாமி, இமான் அண்ணாச்சி ஆகியோர் மக்களுக்குத் தேவைப்படும் உணவுகளை பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று நேரடியாக வழங்கி வருகின்றனர்.
நடிகர் மயில்சாமி தற்காலிக படகு ஒன்றின் மீது மற்றவர்களுடன் இணைந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவினை வழங்கி வருகிறார்.
இதே போன்று மற்றொரு காமெடி நடிகரான இமான் அண்ணாச்சியும் பாதிக்கப்பட மக்கள் இருக்கும் பகுதியில் வீடு, வீடாக சென்று உணவுப் பொருட்களை வழங்கி வருகிறார்.
கடுமையான மழையிலும் மக்களுக்கு உதவிகள் புரியும் இவர்களின் சேவை மனப்பான்மை உண்மையிலேயே பாராட்டுதலுக்கு உரியதுதான்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவருக்கு உணவு வழங்கும் நடிகர் மோகன்News in English


வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவருக்கு உணவு வழங்கும் நடிகர் மோகன் - Cineulagam
மயிலாப்பூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1000 பேருக்கு உணவு வழங்கினார் நடிகர் மோகன். மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னைவாசிகளுக்கு தன்னார்வலர்களும் திரையுலகினரும் போட்டி போட்டுக்கொண்டு உதவிகள் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை ரேகா தனது மகளுடன் சென்று கோயம்பேடு மற்றும் சுற்றுப் புறப் பகுதிகளுக்கு உணவும் போர்வை மற்றும் உடைகளும் வழங்கினார்.
நடிகர் மோகன் இன்று காலை மயிலாப்பூருக்கு சென்று உணவுடன் பிஸ்கட் மற்றும் உடைகளையும் வழங்கினார்.
இந்தப் பொருட்களை மயிலாப்பூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள குடிசைப் பகுதிகளுக்கு தானே நேரில் சென்று ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கினார் மோகன்.

சென்னை மக்களுக்காக நிதி திரட்டும் தெலுங்கு நடிகர் நவ்தீப்நடிகர் நவ்தீப் சென்னை மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு நடிகர்கள் ராணா, பிரபாஸ் மற்றும் முன்னணி தெலுங்கு நடிகர்களுடன் இணைந்து நிதி திரட்டவிருக்கிறார். அறிந்தும் அறியாமலும் உட்பட ஏராளமான தமிழ்ப் படங்களில் படங்களில் நடித்தவர் நவ்தீப்.

இவர் தற்போது தெலுங்கின் இளம் நடிகர்கள் ராணா, பிரபாஸ், சுதீர் பாபு, அல்லரி நரேஷ் மற்றும் லட்சுமி மஞ்சு ஆகியோருடன் இணைந்து சென்னை மக்களுக்காக நிதி திரட்டவிருக்கிறார்.
மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவ நிறைய தெலுங்கு நடிகர்கள் முன்வந்திருக்கின்றனர்.இந்நிலையில் நடிகர் நவ்தீப் தனது நண்பர்கள் மற்றும் மற்றவர்களுடன் இணைந்து சென்னை மக்களுக்குத் தேவைப்படும் பொருட்களை திரட்டி ஒரு டிரக்கில் அனுப்பி வைத்திருக்கிறார்.
மேலும் தெலுங்கின் இளம் நடிகர்கள் ராணா, பிரபாஸ், சுதீர் பாபு, அல்லரி நரேஷ் மற்றும் லட்சுமி மஞ்சு ஆகியோருடன் இணைந்து சென்னை மக்களுக்காக நிதி திரட்டவிருக்கிறார். இதற்கு இவர்கள் தெலுங்கு மொழியில் 'மனமெட்ராஸ் கொசம்' என்று பெயரிட்டு இருக்கின்றனர்.
இந்த நிதி திரட்டும் படலம் மன்ஜீரா மற்றும் கூகட் பள்ளி போரம் மால்களில் நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை சக நடிகர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்த நவ்தீப் மற்ற நடிகர்கள் அல்லரி நரேஷ் மற்றும் லட்சுமி மஞ்சு ஆகியோருடன் இணைந்து இதில் கலந்து கொள்ளவிருக்கிறார்.
வரும் ஞாயிற்றுக் கிழமை மாலை 4 -7 மணிகள் வரை நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் முன்னணி தெலுங்கு நடிகர்கள் 10 பேர் கலந்து கொள்ளவிருக்கின்றனர். இவர்கள் சென்னை நிதிக்காக ரசிகர்கள் மற்றும் பொது மக்களிடம் நிதிதிரட்டவிருப்பது குறிப்பிடத்தக்கது.

180 பேரை தன் வீட்டில் தங்க வைத்த அஜித்!
சென்னையில் வரலாறு காணாத மழை பெய்து பல இடங்களில் வீடுகளின் இரண்டாவது மாடி வரை நீர்மட்டம் உயர்ந்து இருந்தது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே ஆங்காங்கே இருக்கும் மக்கள் தங்களால் முடிந்த உணவுகளயும், பண் மற்றும் பல உணவுப்பொருட்களை சென்னைக்கும் அதன் சுற்றியுள்ள பகுதிக்கும் அனுப்பிய வண்ணம் உள்ளனர். சினிமா நட்சத்திரங்களு,ம் மக்களுக்கு உதவி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ரஜினி மற்றும் விஜய் தங்களின் கல்யாண மண்டபங்களை மக்களுக்காக திறந்து வைத்துள்ளனர். மேலும் இளையதளபதி விஜய் அவர்கள் 5 கோடிக்கு மதிப்பிளான பொருட்களை வழங்கிவருவதாக செய்திகள் வெளிவந்தன.
தற்போது தல அஜித் இதுவரை தன் வீட்டில் 180 பேர் தங்கவைத்து போர்வைகளும் உணவயும் அவரே அளிப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும் மக்கள் தங்குவதற்கு அவரே அழைப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவுகின்றன.
வெளியாட்கள் யாரையும் தன் வீட்டிற்கு அனுமதிக்காத நடிகர்கள் மத்தியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தன் வீட்டிற்கு அழைக்கும் அஜித் அவர்களின் ரசிகர்கள் வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.
வீடு வீடாக உணவு வழங்கிய இமான் அண்னாச்சி

வீடு வீடாக உணவு வழங்கிய இமான் அண்னாச்சி - Cineulagam
கஷ்டப்பட்டு மேல வந்தவனுக்கு தான் கஷ்டத்தோட வலி தெரியும் என்பார்கள். கஷ்டத்தின் விழும்பில் இருந்து படிபடியாக முன்னேரி தற்போது தான் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு வீடாக சென்று உணவு வழங்கிய வருகிறார் "நம்ம இமான் அண்னாச்சி" அவர்கள்.